சுங்கச் சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் தமிழக அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும்: வைகோ வேண்டுகோள்
2022-10-06@ 00:44:09

சென்னை: சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் செய்ததற்கு தமிழக அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் - செங்குறிச்சி சுங்கச்சாவடி மையம், பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச் சாவடி மையங்களில், அரசிடம் முன்னனுமதி எதுவும் பெறாமலும், சட்டப்படி 3 மாதங்களுக்கு முன்பாக தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் எதுவும் அளிக்காமலும் தன்னிச்சையாக திடீரென ஒரே நாளில் 58 பணியாளர்களை சுங்கச் சாவடி நிர்வாகம் வேலை நீக்கம் செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியும், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி சுங்கச் சாவடி நிர்வாகத்தினர் செயல்பட்டு வருகின்றனர். 13 ஆண்டு காலம் தொடர்ச்சியாக பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு எந்த விதமான சலுகைகளையும் அளிக்காமல், சட்ட வழிமுறைகளைப் பின்பற்றாமல் 58 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்திருப்பது, தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக தமிழக அரசு தலையிட்டு, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்திட வேண்டும்.
Tags:
Waiko appeals to Tamil Nadu government to intervene and find a solution for customs booth staff dismissal சுங்கச் சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் தமிழக அரசு தலையிட்டு தீர்வுகாண வைகோ வேண்டுகோள்மேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக, 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் ஓ. பன்னீர்செல்வம்
உச்சநீதிமன்றத்தில் 30ம் தேதி இரட்டை இலை வழக்கு விசாரணை எடப்பாடி, ஓபிஎஸ் அவசர ஆலோசனை: நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே வேட்பாளரை அறிவிக்க இருவரும் முடிவு
சொல்லிட்டாங்க...
வரும் 30ம் தேதி ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசன் கட்சி இணைப்பு? சமூக வலைதள பதிவால் பரபரப்பு
மருத்துவத்துறையில் காலியாக உள்ள இயக்குனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேமுதிக பொறுப்பாளர்கள் விஜயகாந்த் அறிவிப்பு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!