ஜம்முவில் என்கவுன்டர் 4 தீவிரவாதிகள் சாவு
2022-10-06@ 00:43:36

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடந்த இரண்டு என்கவுண்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் டிராச் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர். அப்போது அவர்கள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகள் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். இதில் இரண்டு பேர் ஹனான் பின் யாகூப் மற்றும் ஜாம்ஷெட் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த 2ம் தேதி சிறப்பு போலீஸ் அதிகாரி ஜாவீத் தர் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோல் தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் வீரர்கள் நடத்திய என்கவுன்டரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.
மேலும் செய்திகள்
பெங்களுருவில் இந்திய எரிசக்தி வாரத்தை பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: கடைசி போட்டியை நேரில் காண இருக்கும் பிரதமர் மோடி..?
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிமுக பொதுக்குழு கூட்டப்படும்: டெல்லியில் சி.வி.சண்முகம் பேட்டி
சுப்ரீம் கோர்ட் அமர்வில் சிங்கப்பூர் தலைமை நீதிபதி
பிபிசி ஆவணப்படம் விவகாரம் ஒன்றிய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
ஒபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம்: அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!