உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி
2022-10-06@ 00:43:34

பவுரி: உத்தரகாண்டில் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்றவர்களின் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியானார்கள். 20 பேர் காயமடைந்தனர். உத்தரகாண்டின் ஹரித்துவாரில் லால்தாங் நகரில் இருந்து பிரோன்காலில் உள்ள கண்டா கிராமத்தில் நடக்கும் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சுமார் 50 பேர் பஸ்சில் புறப்பட்டு சென்றனர். நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணி அளவில் சிம்ரி வளைவில் பஸ் திரும்ப முயன்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதனால் பயணிகள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் இரவு முழுவதும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த ஆண்கள், பெண்கள் என 25 பேர் பலியானார்கள். 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்கள் உடனடியாக பிரான்கால், ரிக்னிகால் மற்றும் கோத்வாரில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
Tags:
25 killed in bus overturn in Uttarakhand valley உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 25 பேர் பலிமேலும் செய்திகள்
'கட்சிகளிடம் ஒற்றுமையில்லாததால் 2019ல் மீண்டும் பாஜக ஆட்சி': மாநிலங்களவையில் பாஜக அரசை உப்புமாவுடன் ஒப்பிட்டு விமர்சித்த திருச்சி சிவா..!!
இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கில் ஸ்ரீகாளஹஸ்தியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி
வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்-4 மணிநேரம் தரிசனம் ரத்து
ஆன்லைன் சூதாட்டத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுமா?: மக்களவையில் காங். எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்..!!
மக்களவையில் பாரிவேந்தர் எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்
விசாகப்பட்டினத்தில் தாறுமாறாக ஓடிய கார் தூக்கி வீசப்பட்ட நபர்கள் படுகாயம்: போலீசார் விசாரணை
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!