சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் ரூ. 16.19 கோடி மதிப்பில் 42 பூங்காக்கள் மற்றும் 4.50 கோடி மதிப்பில் 11 விளையாட்டு திடல்கள் அமைக்க ஆணை
2022-10-05@ 18:21:29

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் ரூ. 16.19 கோடி மதிப்பில் 42 பூங்காக்கள் மற்றும் 4.50 கோடி மதிப்பில் 11 விளையாட்டு திடல்கள் அமைக்க பணியாணை வழங்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி, பூங்காத்துறையின் சார்பில் மாநகரில் சுற்றுச்சூழலை பேணிகாக்கவும், பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காகவும், 738 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி அரங்கத்துறையின்கீழ் 220 விளையாட்டு திடல்கள், 173 உடற்பயிற்சி கூடங்கள், 204 குழந்தைகள் விளையாட்டு திடல்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
2022-23ம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே. என். நேரு அவர்கள், நகர்ப்புறங்களை பசுமையாக்கி, இயற்கை சூழலை மேம்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய பூங்காக்கள் மற்றும் ஏற்கனவே உள்ள பூங்காக்கள் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும் எனவும், புதிய விளையாட்டுத் திடல்கள் மற்றும் ஏற்கனவே உள்ள விளையாட்டு திடல்கள் மேம்படுத்தப்படும் எனவும் அறிவித்தார்கள்.
அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய பூங்காக்கள் அமைத்தல் மற்றும் பூங்காக்களை மேம்படுத்தவும், புதிய விளையாட்டுத் திடல்கள் அமைக்கவும் மற்றும் விளையாட்டு திடல்களை மேம்படுத்தவும் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் ரூ. 16.19 கோடி மதிப்பில் 42 பூங்காக்கள் மற்றும் ரூ. 4.50 கோடி மதிப்பில் 11 விளையாட்டு திடல்கள் அமைக்க ஒப்பங்கள் கோரப்பட்டு, மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்களின் தலைமையில் 29.09.2022 அன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் இப்பணிகளுக்காக மன்ற அனுமதி பெறப்பட்டு ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
புதியதாக அமைக்கப்படவுள்ள பூங்காக்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபாதை, குழந்தைகள் விளையாட்டு பகுதி, திறந்த வெளியில் உடற்பயிற்சி கருவிகள், சுற்றுச் சுவர், சுவர்களில் வண்ணமயமான ஓவியங்கள், புல் தரைகள், பாரம்பரிய மர வகைகள், பொதுமக்களுக்கான கழிவறை மற்றும் குடிநீர் வசதி, மின்விளக்குகள் பொதுமக்களுக்கான கழிவறை மற்றும் குடிநீர் வசதி, மின்விளக்குகள் உட்பட பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பூங்காக்கள் விவரம் :
வ.எண் மண்டலம் வார்டு எண் பூங்கா அமையவுள்ள இடம் திட்ட மதிப்பு (ரூ)(இலட்சம்)
1 திருவொற்றியூர் 7 அசோக் அவென்யூ 38.76
2 திருவொற்றியூர் 7 ஹன்ஸா ஜெம்ஸ் 37.56
3 மாதவரம் 26 அசிஸி நகர், 10 வது தெரு. 47.23
4 மாதவரம் 27 மீனாம்பாள் அவென்யூ, சாஸ்திரி நகர் 39.66
5 மாதவரம் 30 தணிகாச்சலம் நகர், 3 வது தெரு 26.61
6 மாதவரம் 32 எஸ்.ஐ.எஸ் கேப்டவுன் மேட்டூர் இணைப்பு சாலை 27.37
7 மாதவரம் 31 ஜெய் மாருதி நகர், மேற்கு புறம் 22.82
8 மாதவரம் 31 ரங்கா அவென்யூ 63.58
9 மாதவரம் 31 ஸ்ரீனிவாசா நகர், 2 வது தெரு 52.31
10 மாதவரம் 31 ஜெய் மாருதி நகர், கிழக்கு புறம் 28.04
11 தண்டையார்பேட்டை 42 கைலாசம் தெரு 12.58
12 இராயபுரம் 53 ராம்தாஸ் நகர் 38.70
13 திரு.வி.க.நகர் 64 வில்லிவாக்கம் பாலம் ரயில்வே சந்திப்பு 118.27
14 திரு.வி.க.நகர் 73 ஸ்டீபன்சன் சாலை 130.92
15 திரு.வி.க.நகர் 76 பெரம்பூர் பேரக்ஸ் சாலை 72.64
16 அம்பத்தூர் 82 நாராயணா நகர் 23.22
17 அம்பத்தூர் 89 ஜீவன் பீமா நகர், மதுரை வீரன் தெரு 20.14
18 அம்பத்தூர் 89 டிவிஎஸ் அவென்யூ, 34 வது தெரு 6.39
19 அம்பத்தூர் 90 பாடி குப்பம், பிரதான சாலை 23.62
20 அம்பத்தூர் 93 நக்கீரன் சாலை 13.32
21 அம்பத்தூர் 93 பஜார் சாலை, எம்.எம்.எம் மருத்துவமனை அருகில் 26.62
22 அம்பத்தூர் 90 திருமங்கலம் பிரதான சாலை 12.36
23 வளசரவாக்கம் 155 தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 1 9.78
24 வளசரவாக்கம் 155 தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 2 29.86
25 வளசரவாக்கம் 144 7 வது பிளாக், பிரதான சாலை, எம். எம். டி. ஏ காலனி 25.61
26 வளசரவாக்கம் 143 ஐந்தாவது பிளாக், 2 வது குறுக்கு தெரு 23.62
27 வளசரவாக்கம் 147 கங்கா நகர், 3 வது பிரதான சாலை 24.99
28 வளசரவாக்கம் 143 2 வது பிரதான சாலை , பகுதி 1 24.65
29 வளசரவாக்கம் 145 அருள்மிகு மீனாட்சி நகர், முதல் தெரு 19.70
30 அடையாறு 171 லீலா பேலஸ் 24.37
31 அடையாறு 171 சோமர் செட் 25.11
32 பெருங்குடி 182 RMZ பகுதி 1, எம்ஜிஆர் சாலை 32.70
33 அடையாறு 186 பாலாஜி நகர், 24வது தெரு 59.43
34 சோழிங்கநல்லூர் 194 எம். கே. ராதா அவன்யூ 41.54
35 சோழிங்கநல்லூர் 196 திருவள்ளூர் தெரு 30.92
36 சோழிங்கநல்லூர் 197 வி. ஜி. பி தெற்கு பிரதான சாலை 72.11
37 சோழிங்கநல்லூர் 198 நேரு சாலை 43.29
38 சோழிங்கநல்லூர் 199 தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சி 7 சாலை 47.68
39 சோழிங்கநல்லூர் 199 பாலாஜி நகர் 67.47
40 சோழிங்கநல்லூர் 199 தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஏ சாலை 38.04
41 சோழிங்கநல்லூர் 200 293 / 3B, ஜனனி ஹோம்ஸ் 46.24
42 சோழிங்கநல்லூர் 200 297 / 3B, ஜனனி ஹோம்ஸ் 49.50
மொத்தம் 1619.33
தற்சமயம் அமைக்கப்பட உள்ள விளையாட்டு திடல்களில் சுற்று சுவர், சுவர்களில் வண்ண ஓவியங்கள், திறந்த வெளியில் உடற்பயிற்சி கருவிகள், கால்பந்து மைதானம், கைப்பந்து மைதானம், கூடைப்பந்து மைதானம், பாரம்பரிய மர வகைகள், பொதுமக்களுக்கான கழிவறை மற்றும் குடிநீர் வசதி, மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
விளையாட்டு திடல்கள் விவரம் :
வ.எண் மண்டலம் வார்டு எண் விளையாட்டு திடல் அமையவுள்ள இடம் திட்ட மதிப்பு (ரூ)(இலட்சம்)
1 திருவொற்றியூர் 3 சுனாமி குடியிருப்பு, திறந்தவெளி பூங்கா 1, 17.80
2 திருவொற்றியூர் 3 சுனாமி குடியிருப்பு, திறந்தவெளி பூங்கா 5, 23.80
3 திருவொற்றியூர் 3 சுனாமி குடியிருப்பு, திறந்தவெளி பூங்கா 9, 24.43
4 திருவொற்றியூர் 3 சுனாமி குடியிருப்பு, திறந்தவெளி பூங்கா 2, 23.41
5 திருவொற்றியூர் 3 சுனாமி குடியிருப்பு, திறந்தவெளி பூங்கா 7, 29.61
6 இராயபுரம் 53 கட்படா பிரதான சாலை, திறந்தவெளி நில ஒதுக்கீடு 2 24.97
7 வளசரவாக்கம் 147 காந்தி தெரு, கங்கா நகர் 10.62
8 பெருங்குடி 181 சுப்பிரமணியம் சாலை 23.17
9 பெருங்குடி 187 சேதுராமன் காலனி, 3 வது தெரு 16.72
10 சோழிங்கநல்லூர்196 கண்ணகி நகர், 4 வது பிரதான சாலை 87.14
11 சோழிங்கநல்லூர்199 தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சி 14 சாலை168.90
மொத்தம் 450.57
இந்த பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கப்பட்டு, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர்வழித்தடங்களில் கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி தீவிரம்..!!
இரவு நேரங்களில் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் சாலைகளை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது: சென்னை மாநகராட்சி தகவல்
சென்னையில் 37,000 வாகனங்களில் இருந்த முறையற்ற வாகன பதிவு எண்கள் சரி செய்யப்பட்டன: போக்குவரத்து காவல்துறை தகவல்
ஆவினில் காலி பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மாநில அளவிலான வனத்தீ மேலாண்மை குறித்த கருத்துப் பட்டறை
அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் விளக்கு பகுதி காவலர் குடியிருப்புக்கு ஆபத்து?.. சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் பரபரப்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!