தமிழகத்தில் 8ம் தேதி வரை மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
2022-10-05@ 15:47:26

சென்னை: வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் வெப்ப சலனம் காரணமாக தமிழத்தில் வளிமண்டல மேல் அடுக்கில் நீடித்து வரும் வளி மண்டல் காற்று சுழற்சியால் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நேற்றிரவு உருவான காற்றழுத்தம், வலுப்பெற்று இன்று காலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.
இது சென்னை- ஆந்திர கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளதால், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக 8ம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையில் மேகமூட்டம் இருக்கும். 8ம் தேதி வரை மழை பெய்யும். மேலும் புறநகர் பகுதிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
மேலும் செய்திகள்
சொத்துவரி நிலுவையில் வைத்துள்ள சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியினை உடனடியாக செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
‘சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற ஆயத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது: காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்
சென்னை செனாய்நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் பொதுமக்களின் அனைத்து குடும்ப சுப நிகழ்ச்சிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி: சென்னை மாநகராட்சி
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடம் 4-ல் மின்சாரம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
சென்னை - பெங்களூரு விரைவுச்சாலைக்கு நிலம் எடுப்பில் ரூ.100 கோடி மோசடி..? அதிர்ச்சி தகவல்..!
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!