2022-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவிப்பு
2022-10-04@ 15:57:04

2022-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. பிரான்சின் அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர், ஆஸ்திரியாவின் ஷிலிங்கருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2022-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான இயற்பியல் பரிசை 3 பேர் பெறுகின்றனர். பிரான்சின் அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர், ஆஸ்திரியாவின் ஷிலிங்கருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கலான ஃபோட்டான் சோதனை, பெல் ஏற்றத்தாழ்வுகளை மீறுதல், குவாண்டம் தகவல் அறிவியல் ஆகிய ஆராய்ச்சிக்காக 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
விண்வெளி ஆய்வு நிலையத்தில் சிக்கிய 3 வீரர்களை பூமிக்கு கொண்டு வர மாற்று விண்கலத்தை ஏவியது நாசா!!
ஜோதிடமும் அறிவியலும்
மூளை முடக்கு வாதத்தை குணப்படுத்த முடியும்
நிலா இல்லைனா பறந்திடுவோமா...? வியாழன் இல்லைனா பூமி வெடிச்சுடுமா...?
நிலவில் 800 கோடி மனிதர்கள் கிட்டத்தட்ட 1 லட்ச ஆண்டுகள் வாழ தேவையான ஆக்சிஜன் இருப்பதாக நாசா தகவல்!!
ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைகோள்: சீனா சாதனை
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!