ராணிப்பேட்டை மாவட்டத்தில் 52 லட்சம் பனை விதைகள் 5 மணி நேரத்தில் நட்டு உலக சாதனை: 80 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்பு
2022-10-04@ 02:51:14

வாலாஜா: தமிழக முதல்வரின் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 288 கிராம ஊராட்சிகளிலும் பனை விதைகள் நடுவதற்காக, விதைகளை சேகரிக்கும் பணி கடந்த 3 மாதங்களாக மும்முரமாக நடந்து வந்தது. தொடர்ந்து, நேற்று மாவட்டம் முழுவதும் 5 மணி நேரத்தில் 52 லட்சம் பனை விதைகள் நடும் உலக சாதனை நிகழ்வு நடந்தது.அதன்படி, வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் கிராமத்தில் நடந்த பனை விதை நடும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டனர். தொடர்ந்து, அமைச்சர், கலெக்டர் ஆகியோர் பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தனர்.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசுகையில், கடந்த 3 மாதங்களாக உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், அரசு ஊழியர்கள் தீவிர முயற்சியினால் 52 லட்சம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள 288 கிராம ஊராட்சிகளிலும் மரம் நடும் பணி காலையில் தொடங்கி மாலை வரை 5 மணி நேரத்தில் 52 லட்சம் பனை விதைகள் நடப்படுகிறது. இது உலக சாதனையாகும். இந்த பணியில் 80 ஆயிரம் தன்னார்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். பனை மரங்களை தொடர்ந்து பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’ என்றார்.
மேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட் மோடி அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: பாலகிருஷ்ணன் பேட்டி
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு ஓடும் ரயிலில் பாய்ந்து பள்ளி மாணவியுடன் கல்லூரி மாணவர் தற்கொலை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்
மேலவளவு முருகேசன் கொலை வழக்கு!: 13 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யகோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4-ம் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஒரே நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!