மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடனை சேர்ந்த ஸ்வான்டே பாபோவுக்கு அறிவிப்பு
2022-10-03@ 18:28:16

லண்டன்: மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடனை சேர்ந்த ஸ்வான்டே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித பரிணாம வளர்ச்சியில் மரபியல் சார்ந்த ஆய்வில் சாதித்ததற்காக ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது. அக்டோபர் தொடக்கம் என்றால் நோபல் பரிசு காலம் ஆகும். ஆறு நாட்கள், ஆறு பரிசுகள், உலகம் முழுவதிலுமிருந்து புதிய முகங்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் மனித உரிமைத் தலைவர்கள் இந்த் நோபல் பரிசு பட்டியலில் இடம் பெறுவர் அதில் தேர்ந்து எடுக்கபட்டு வழங்கப்படுவார்கள்.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு சீசன் இன்று மருத்துவ விருதுடன் தொடங்குகிறது. செவ்வாய்கிழமை இயற்பியல், புதன்கிழமை வேதியியல் மற்றும் வியாழன் இலக்கியம். 2022ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதார விருது அக்டோபர் 10-ஆம் தேதியும் அறிவிக்கப்படும். கடந்த வருடம் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜுலியஸ் (David Julius) மற்றும் ஆர்டம் பட்டாபுடியான் (Ardem Patapoutian) ஆகிய இருவருக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கபட்டது.
வெப்பநிலை மற்றும் தொடுதல் மூலமாக உடலில் நடக்கும் மாற்றங்களை, உடலை தொடாமல் அறியும் உணரிகளைக் கண்டுபிடித்ததற்காக இந்த இரு ஆராய்ச்சியாளர்களும் இந்தப் பரிசை பெற்றனர். 2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு 'அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக' அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் செய்திகள்
குண்டுவெடிப்பில் 101பேர் பலி எதிரொலி; பாகிஸ்தானில் போலீசுக்கே பாதுகாப்பில்லை: ஆர்ப்பாட்டத்தில் குதித்த போலீசார்
அபுதாபியில் இருந்து புறப்பட ஏர் இந்தியா விமானதில் நடுவானில் தீ: அவசரமாக தரையிறக்கம்
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.57 கோடியாக அதிகரிப்பு
இந்தியாவுடனான உறவு நீடிக்கும் பிபிசியின் சுதந்திரத்தை அரசு பாதுகாக்கும்: இங்கிலாந்து அறிவிப்பு
அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சவாளி நிக்கி ஹாலே போட்டி?
நிலக்கரிக்கு அதிக கட்டணம் அதானி ஒப்பந்தம் மறுபரிசீலனை: வங்கதேசம் அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!