முதல் சுற்று தேர்தலில் யாரும் 50% வாக்குகளை பெறவில்லை: பிரேசில் அதிபரை தேர்வு செய்ய 2-வது சுற்று தேர்தல்
2022-10-03@ 14:00:36

பிரேசில் : பிரேசில் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அதிக வாக்குகள் பெற்ற 2 போட்டியாளர்களான லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, ஜெயிர் போல்சனரோ இடையே விரைவில் இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெற உள்ளது. பிரேசில் அதிபர் தேர்தலில் நேற்று விறுவிறுப்பாக வாக்கு பதிவு நடைபெற்றது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாக்குச் சாவடிகளில் மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெயிர் போல்சனரோ மீண்டும் போட்டியிடுகிறார்.
அதிபர் தேர்தலில் 9 பேர் போட்டியிட்டாலும் ஜெயிர் போல்சனரோவுக்கும், முன்னாள் அதிபர் ஊழல் வழக்கு சிறைவாசம் அனுபவித்து விட்டு வந்துள்ள இடதுசாரி வேட்பாளருமான லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கும் இடையில் தான் பலத்த போட்டி நிலவுகிறது. வாக்கு பதிவு முடிந்து வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்ட நிலையில் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா 48.43 விழுக்காடு வாக்குகளை பெற்றார். போல்சனரோவுக்கு 43.2 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன.
பிரேசில் நாட்டு தேர்தல் நடைமுறையின் படி அதிபர் தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளரும் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளை பெற தவறினால் 2-ம் கட்ட தேர்தல் நடத்தப்பட்ட வேண்டும். முதல் கட்ட தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற 2 வேட்பாளர்களுக்கிடையே 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும். எனவே, அதிபர் தேர்தலில் முதல் 2 இடத்தை பிடித்துள்ள லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா மற்றும் ஜெயிர் போல்சனரோ ஆகியோர் 2-ம் கட்ட தேர்தலில் மோதுகின்றனர். உலகில் 4-வது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலின் புதிய அதிபர் இனாசியோ லூலாவா, போல்சனரோவா என்பதற்கு இன்னும் ஒரு மாதத்தில் விடை கிடைத்துவிடும்.
மேலும் செய்திகள்
மசூதி குண்டுவெடிப்பில் 100 பேர் பலி: இந்தியாவில் கூட இப்படி நடப்பதில்லை! பாகிஸ்தான் அமைச்சர் வேதனை
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஊழியர்களுக்கு போனஸை வாரி வழங்கிய சீன நிறுவனம்
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் கடும் உறைபனி: வெள்ளியை உருக்கி ஊற்றியது போல காட்சியளிக்கும் மரங்கள்
ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் வழங்கிய சீன நிறுவனம்: லாபம் பெருகியதை அடுத்து ரொக்கமாகவே போனஸ்
பாலியல் வழக்கில் சிக்கிய நேபாள முன்னாள் கிரிக்கெட் கேப்டன்: மீது விதித்த தடையை நீக்க முடிவு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.51 கோடியாக அதிகரிப்பு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!