தேசிய கட்சி குறித்து 2 நாளில் அறிவிப்பு; கேசிஆர் முடிவு
2022-10-03@ 01:29:11

ஐதராபாத்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் (கேசிஆர்) பாஜவுக்கு மாற்றாக தேசிய அளவில் கட்சி தொடங்க இருப்பதாகவும் விஜயதசமியன்று இதற்கான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி (டிஆர்எஸ்) தெரிவித்துள்ளது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முன்பு பாஜ.வுடன் நெருக்கமாக இருந்தார். தற்போது அக்கட்சியுடன் கடுமையான மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். வரும், 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜவை தோற்கடிக்க, தேசிய அளவில் கூட்டணியை உருவாக்க சந்திரசேகர ராவ் முயன்று வருகிறார். இது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்,மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்து பேசினார்.
பாஜவை எதிர்க்க தேசிய அளவில் கட்சி தொடங்கப்படும் என்று கடந்த மாதம் சட்டமன்றத்தில் பேசுகையில் அறிவித்தார். அடுத்த மக்களவை தேர்தலில் பாஜ அல்லாத கட்சி வெற்றி பெற்றால் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில், டிஆர்எஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘‘புதிய கட்சி தொடங்குவதற்கான திட்டங்கள் தயாராகி வருகிறது. கட்சி தொடக்கம் குறித்து விஜயதசமி பண்டிகையின் போது(5ம் தேதி) அறிவிப்பு வெளியாகும். இதில் டிஆர்எஸ் பெயர் மாற்றப்பட்டு புதிய கட்சி உருவெடுக்கும்’’ என்றன.
மேலும் செய்திகள்
ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவு ரத்து பிரதமர் மோடி கல்வித் தகுதி தகவல் தர வேண்டியதில்லை: டெல்லி முதல்வருக்கு ரூ.25,000 அபராதம் குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராமநவமி கலவரம் மேற்கு வங்கத்தில் 144 தடை உத்தரவு அமல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு
0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு
கொசுவர்த்தி சுருளால் தீ பற்றி 6 பேர் பலி
தற்கொலை எண்ணத்தை மாற்ற ராகுல் காந்திதான் காரணம்: ரம்யா உருக்கம்
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்கள் தாக்கல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!