சர்ச்சை பேச்சு எதிரொலி; பீகார் அமைச்சர் திடீர் ராஜினாமா
2022-10-03@ 01:28:38

பாட்னா: நிதிஷ் குமார் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய பீகார் வேளாண் அமைச்சர் சுதாகர் சிங் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். பீகார், கைமூரில் நடந்த கூட்டத்தில் சமீபத்தில் பேசிய மாநில அமைச்சர் சுதாகர் சிங், “எங்கள் துறையில் (வேளாண் துறை) திருட்டுச் செயல்களைச் செய்யாத ஒரு பிரிவுகூட இல்லை. மேலும், இந்தத் துறையின் பொறுப்பாளராக நானே இருப்பதால், அத்தகையவர்களுக்கு நானே தலைவராகவும் ஆகிவிட்டேன். அதோடு, விதைக் கழகம் வழங்கும் விதைகளை எந்த விவசாயியும் தன்னுடைய வயல்களில் பயன்படுத்துவதில்லை. தரமான நெல் சாகுபடி செய்ய வேண்டிய விவசாயிகள், பீகார் மாநில விதைக் கழகத்தின் நெல் விதைகளை எடுப்பதில்லை.
விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுப்பதற்குப் பதிலாக, விதை நிறுவனங்கள் ரூ.100 முதல் 150 கோடி திருடுகின்றன. தற்போது மாவட்டத்திலிருந்து இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். அதற்குப் பிறகும் நிலைமை மாறவில்லை என்றால், அமைச்சராகி என்ன பலன்? கைமூர் மாவட்டம் ஊழல் அதிகாரிகளால் நிறைந்துள்ளது” என்றார். அவர் தொடர்ந்து சர்ச்சையாக பேசி வந்த நிலையில் நேற்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வியாதவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதை அவரது தந்தையும் மாநில ஆர்ஜேடி தலைவருமான ஜெகதானந்த் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
நமது நிர்வாக நடைமுறைகள் மிகத் திறன் வாய்ந்தது: குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு
பெங்களுருவில் இந்திய எரிசக்தி வாரத்தை பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: கடைசி போட்டியை நேரில் காண இருக்கும் பிரதமர் மோடி..?
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிமுக பொதுக்குழு கூட்டப்படும்: டெல்லியில் சி.வி.சண்முகம் பேட்டி
சுப்ரீம் கோர்ட் அமர்வில் சிங்கப்பூர் தலைமை நீதிபதி
பிபிசி ஆவணப்படம் விவகாரம் ஒன்றிய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!