அரசு ஊழியர்கள் பொதுமக்களிடம் பேசும் போது ‘ஹலோ’வுக்கு பதில் ‘வந்தே மாதரம்’; மகாராஷ்டிரா அரசு திடீர் உத்தரவு
2022-10-02@ 18:51:07

மும்பை: அரசு அதிகாரிகள் பொது மக்களிடம் பேசும்போது ‘ஹலோ’ என்று செல்வதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘மகாராஷ்டிரா அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், ெபாதுமக்களிடமிருந்து தொலைபேசி அல்லது செல்போன் அழைப்புகள் வந்தால், இனிமேல் ‘ஹலோ’ என்று செல்வதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும்.
அதேபோல் மாநில அரசு அதிகாரிகள், தங்களை சந்திக்க வரும் மக்களிடமும், அவர்களை வரவேற்கும் விதமாக ‘வந்தே மாதரம்’ வாழ்த்துச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இதனை மக்களிடமும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ‘ஹலோ’ என்ற சொல்லானது, மேற்கத்திய நாடுகளின் கலாசாரத்தைப் பின்பற்றுவதாகும்.
இந்த ஹாலோ என்ற சொல்லுக்கு எந்தவொரு குறிப்பிட்ட பொருளும் இல்லை. ஒருவருக்கு ஒருவரை அன்பை பகிர்ந்து கொள்ளும் சொல்லாகவும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக தலைவர் சுதிர் முங்கந்திவார் கூறுகையில், ‘நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை கொண்டாடி வருகிறோம். அதனால், அரசு ஊழியர்கள் இனிமேல் வணக்கம் என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம்; அதற்கு மாறாக வந்தே மாதரம் என்ற சொல்லை பொதுதளங்களில் பயன்படுத்த வேண்டும்’ என்று கூறினார்.
மேலும் செய்திகள்
ராகுல்காந்தி உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை
சன்னிலியோன் நிகழ்ச்சி அருகே குண்டு வெடிப்பு: மணிப்பூரில் பரபரப்பு
உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு: கொலிஜீயம் பரிந்துரைக்கு அரசு ஒப்புதல்
ஜவுளி துறைக்கு வரப்பிரசாதம் 90% தண்ணீரை குறைக்கும் நானோ தொழில்நுட்பம்: ஐஐடி ரோபர் கண்டுபிடிப்பு
முதலில் ஆன்லைன் தேர்வு அக்னிவீர் ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம்
அதானியின் எப்பிஓ விலகலால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!