பைக் மீது லாரி மோதி விபத்து அண்ணன் கண்ணெதிரே தங்கை உடல் நசுங்கி பலி
2022-10-02@ 03:17:21

குன்றத்தூர்: மாங்காடு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அண்ணன் கண்ணெதிரே தங்கை உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் மரியம் ஜோசப் வின்ஸ்டன் (65). இவர், சென்னை, ஜாபர்கான்பேட்டையில் வசிக்கும் தனது தங்கை ரோஸ்லின் பிரமிளா (55) என்பவரை நேற்று தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தார். வண்டி கெருகம்பாக்கம் பிரதான சாலையில் வந்தபோது, இவர்களது வாகனத்தை முந்திச்செல்ல முயன்ற லாரி ஒன்று, எதிர்பாராத விதமாக வின்ஸ்டன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில், 2 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது, லாரியின் பின் சக்கரம் ரோஸ்லின் மீது ஏறி இறங்கியது.
இதில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வின்ஸ்டன் காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இறந்த ரோஸ்லின் உடலை மீட்டு, அதனை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து, விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுநர் ராஜேஷ் (34) என்பவரை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இருப்பிடத்தினை சென்னை பஸ் செயலி மூலம் அறிந்து கொள்ளும் சேவை விரிவு படுத்தப்பட உள்ளது: அமைச்சர் சிவசங்கர் தகவல்..!
கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வாய்ஜாலம் காட்டும் ஒன்றிய அரசு பட்ஜெட்: தொல். திருமாவளவன் கண்டனம்
மாங்காட்டில் வரி செலுத்தாத கடைகளுக்கு சீல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்கப்படும்: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு
பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!