ரயிலில் பயணம் செய்தபோது அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல் நலக்குறைவு
2022-10-02@ 01:24:53

சிதம்பரம்: தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்றுமுன்தினம் இரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுக்கோட்டையில் ஏறியுள்ளார். ஏசி முன்பதிவு பெட்டியில் பயணித்த அவருக்கு நள்ளிரவு 2 மணியளவில் சிதம்பரம் அருகே வந்தபோது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடல் வியர்ப்பதாக உதவியாளரிடம் கூறியுள்ளார்.
இதுபற்றி போலீசாருக்கு தெரிவித்ததையடுத்து சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றது. அப்போது, சிதம்பரம் ரயில்வே போலீசார், அமைச்சர் மெய்யநாதனை பாதுகாப்பாக அழைத்துச் சென்று அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்து கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்பி சக்திகணேசன், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கதிரேசன், கோட்டாட்சியர் ரவி ஆகியோர் வந்து அமைச்சரிடம் உடல் நலம் விசாரித்தனர். இதை தொடர்ந்து நேற்று காலை அமைச்சரின் குடும்பத்தினர் வந்து அவரை சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து சென்றனர்.
மேலும் செய்திகள்
குளித்தலை கடம்பனேஸ்வரர் கோயிலில் தைப்பூச திருவிழா 8 ஊர் சாமிகள் தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு: போனில் பேசியவருக்கு வலை
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மாநில அரசு கோரிக்கை வைத்தால் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
அரக்கோணம் அருகே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற விஏஓ
புதுவையிலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க உத்தரவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!