பெரியகுளத்தில் சிறுத்தை கொலை? ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திடம் விசாரணை நடத்தப்படும்; வனத்துறை ரேஞ்சர் தகவல்
2022-10-02@ 01:23:11

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சொர்க்கம் கோம்பை வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிரிழந்தது. அந்த இடம் ஓபிஎஸ்சின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டமாகும். இந்த தோட்டத்தில் ஆட்டுமந்தை அமைத்துள்ள பூதிபுரத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன்(35) என்பவரிடம் வனத்துறையினர் விசாரித்தனர். அவர் அமைத்திருந்த ஆட்டுக்கிடையில் 2 ஆடுகள், சிறுத்தைக்கு பலியானது.
இதனால் சோலார் மின்வேலியில் சுருக்கு கம்பி அமைத்து சிறுத்தை கொல்லப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து அலெக்ஸ் பாண்டியனை கைது செய்தனர். இதுகுறித்து ரேஞ்சர் செந்தில்குமார் கூறுகையில், ‘‘சம்பவம் தொடர்பாக நிலத்தின் உரிமையாளர்களான தேனி எம்பி ரவீந்திரநாத், மற்றும் காளீஸ்வரன் தியாகராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.
மேலும் செய்திகள்
ரேஷன் பொருட்கள் வாங்க தினமும் 2 கிலோமீட்டர் நடந்து ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் சென்று வரும் கிராம மக்கள்
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பக்தி பரவசம்..!
நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டது: சுகாதார அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு
விளாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் கலைஞர் அரங்க கட்டிடம் திறப்பு
வருவாய் மீட்பு சட்டத்தில் அசல் ஆவணங்களை விடுவித்து கிரையதாரர்களிடம் ரூ.6 லட்சம் வசூல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!