மதிமுக துணை பொதுசெயலாளரை கண்டித்து காஞ்சிபுரம் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா
2022-10-02@ 01:16:38

சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வளையாபதி தனது முகநூல் பக்கத்தில் தான் கடந்த 28 ஆண்டு காலமாக மதிமுகவில் நீடித்து வருவதால் இனி வரும் காலங்களில் இளைஞர்களுக்கு வழிவிடும் நோக்கில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தலைமை கழகத்திற்கு தெரிவித்திருந்தார். இதற்கு வைகோ உடனடியாக அலைபேசியில் பேசி பதவியில் நீடிக்குமாறு கேட்டுக்கொண்டு மதிமுக வலை பக்கத்தில் அவர் பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாநில துணை பொதுச்செயலாளர் மு.து.ராஜேந்திரன் என்பவர் இதற்கு எதிர் பதிலை பதிவு செய்திருந்தார்.
இது கண்ணிய குறைவாக இருப்பதாக கூறி அதை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக செயலாளர் வளையாபதி, செயலாளர் சா.மகேஷ், ஒன்றிய செயலாளர்கள் ஏழுமலை, இராவணன், பாஸ்கரன், முச்சந்தி தலைமை செயற்குழு உறுப்பினர் அருள், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசன் ராமானுஜம், மாநில நெசவாளர் அணி ஏகாம்பரம் உள்ளிட்ட நிர்வாகிகள், நகரம், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 28 பேர் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தி கட்சிப் பதவிகளை மட்டும் ராஜினாமா செய்வதாகவும், தொடர்ந்து மதிமுக வாழ்நாள் உறுப்பினராக செயல்படுவதாக தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
சென்னையில் வரும் 31-ம் தேதி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம்
இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு சிறையில் உள்ள 60 கைதிகள் விடுதலை
பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தினை பிப்.1ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கடுமையான குளிர், பயணிகள் எண்ணிக்கை குறைவால் சென்னையில் 6 விமானங்கள் ரத்து
நாளை முதல் பிப். 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!