ஆர்எஸ்எஸ் பேரணிக்கான அனுமதியை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்; கே.எஸ். அழகிரி வலியுறுத்தல்
2022-10-02@ 01:14:51

சென்னை:ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். தமிழக காங்கிரஸ் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95வது பிறந்த நாள் விழா சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவபடத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், துணைத் தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, கீழானூர் ராஜேந்திரன், தாமோதரன், கலைப் பிரிவு மாநில தலைவர் சந்திரசேகரன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ். திரவியம், சிவ ராஜசேகரன், டில்லி பாபு, மயிலை தரணி, மலர்கொடி, மயிலை அசோக் குமார், தளபதி பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: உலகம் போற்றக்கூடிய ஒரு நடிகர் சிவாஜி கணேசன். உலகத்தில் எந்த ஒரு நடிகரும் அவருக்கு இணை இல்லை. எந்த வகையில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்கிறார்கள் என்று புரியவில்லை. நீதிமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டாலும் சட்ட ஒழுங்கு என்பது மாநிலத்தின் கடமை. மீண்டும் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றார்.
மேலும் செய்திகள்
ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில்: அதானி குழும நிறுவங்களின் பங்குகள் விலை வீழ்ச்சி
2023 ஜனவரி மாதத்தில் 66.07 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம்: டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாதத்தில் 1.48 லட்சம் பயணிகள் அதிகம்
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்க ரயில் மூலமாக வேலூர் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாநகர பேருந்தை நடத்துனர்கள் இயக்கக் கூடாது: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாளர் சுற்றறிக்கை
2,715 பெண் காவலர்களுக்கு 2ம் கட்ட ‘ஆனந்தம்’ பயிற்சி: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
வில்லிவாக்கத்தில் கடைகளுக்கு நிவாரணம் கோரி வியாபாரிகள் சாலை மறியல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!