SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெஸ்லா நிறுவனம் தயாரித்துள்ள அதிநவீன ரோபோவை அமெரிக்காவில் அறிமுகம் செய்தார் எலான் மஸ்க்: அலுவலகம், வீட்டு வேலைகளை செய்யுமாம்..!!

2022-10-01@ 10:52:26

கலிபோர்னியா: பிரபல டெஸ்லா வாகன தயாரிப்பின் நிறுவன தலைவரான எலான் மஸ்க், தனது நிறுவனம் தயாரிப்பான அதிநவீன ரோபோவை அறிமுகம் செய்துள்ளார். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தாலோ ஆல்ட்ரோ என்ற இடத்தில் ஏ.இ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற டெஸ்லா அதிபர் எலான் மஸ்க், 'ஆப்டிமஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள நவீன ரோபோவை அறிமுகம் செய்து வைத்தார். அவர் அறிமுகம் செய்ததும் மேடையில் அமர்ந்திருந்த 'ஆப்டிமஸ்'  ரோபோ பார்வையாளர்களை நோக்கி கையசைத்ததை அடுத்து அரங்கத்தில் கரவொலி எழுந்தது.

தொடர்ந்து பேசிய எலான் மஸ்க், 'ஆப்டிமஸ்' ரோபோவின் சிறப்பு இயல்புகளை விவரித்தார். மிகவும் மலிவான விலையில், அதிக திறன்கள் கொண்ட ரோபோக்களை தயாரிக்கும் தனது கனவு, இதன் மூலம் நினைவாகி இருப்பதாக அவர் கூறினார். 'ஆப்டிமஸ்' ரோபோ அலுவலகம், வீட்டு வேலைகளை செய்யும். இந்திய மதிப்பீட்டில் 16 லட்சம் ரூபாய்க்கு விற்க மஸ்க் முடிவு செய்திருக்கிறார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • erode-dmk-votes-2

    அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

  • scotland-bonfire-festival

    ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

  • stalin-corp-31

    மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

  • long-whale-newyork

    35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

  • pak-blast-30

    பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்