பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவே பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்வு: தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா விளக்கம்
2022-10-01@ 00:09:36

சென்னை: பண்டிகைகாலங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவே நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா விளக்கமளித்துள்ளார். தெற்கு ரயில்வே சார்பில் ‘யுவர் ப்ளாட்ஃபார்ம்’ என்ற மாதாந்திர இதழ் வெளியீட்டு விழா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த இதழின் முதல் பிரதியை தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா மற்றும் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் கணேஷ் ஆகியோர் வெளியிட்டனர். அதனை தொடர்ந்து சென்னை பெங்களூர் செல்லும் டபுள் டெக்கர் ரயிலில் பயணித்த பயணிகளுக்கு இந்த இதழ் விநியோகிக்கப்பட்டது.
பின்னர் இது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய ரயில்வேயின் பாரம்பரியம், கலாசார பெருமையை தெரிந்துகொள்ளும் விதமாக யுவர் பிளாட்ஃபார்ம் என்ற மாதந்திர இதழ் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த இதழ் ராஜ்தானி, சதாப்தி, டபுள் டெக்கர் போன்ற ரயில் பயணிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. இந்த இதழ் மூலம் பயணிகள் மற்றும் தெற்கு ரயில்வேக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்படும். மேலும், பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி பயணிகள் இடையூறு இல்லாமல் பயணிக்கவே நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது .இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்: உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி பதில்
மெரினா கடற்கரையில் ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட விவகாரம்: வீடியோ பதிவு மூலம் 20 மாணவர்களை கைது செய்யும் பணி தொடங்கியது
இந்தியாவிலேயே அதிக மாசுப்பட்ட ஆறு கூவம்: ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குறித்து இன்று மாலை அறிவிப்பு
புரசைவாக்கம் கங்காதரேசுவர் கோயிலில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு
தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!