கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு 4 மாதங்களில் 450 டிஎம்சி தண்ணீர் திறப்பு
2022-10-01@ 00:04:44

பெங்களூரு: கர்நாடகாவில் இருந்து கடந்த 4 மாதங்களில் தமிழகத்திற்கு 450 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டதாக இம்மாநில நீர்ப்பாசன துறை அமைச்சர் கோவிந்தகார்ஜோள் தெரிவித்தார். இது குறித்து பெங்களூருவில் நேற்று அவர் அளித்த பேட்டி: கர்நாடகாவில் கடந்த 3 ஆண்டுகளாக நல்ல மழை பெய்து வருவதால், வறட்சி முழுமையாக நீங்கியுள்ளது. நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நதியோரங்களில் உள்ள 17 ஆயிரம் ஏரிகளில் நீர் நிரப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நல்ல மழை காரணமாக நிலத்தடி நீர் மட்டம் 50 முதல் 65 சதவீதம் உயர்ந்துள்ளது. சிறு நீர்ப்பாசன துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் தவிர, பெரிய நீர்ப்பாசன துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 4,502 ஏரிகளில் 1,298 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. மற்ற 3,204 ஏரிகளை நிரப்பும் பணி நடக்கிறது. கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதியில் இருந்து இந்தாண்டு 273 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி ஆண்டுக்கு 177 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்க வேண்டும். கடந்த ஜூன் 1 முதல் இன்று (நேற்று) வரை 450.53 டிஎம்சி தண்ணீர், தமிழகத்துக்கு திறக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Karnataka Tamil Nadu 4 months 450 TMC water opening கர்நாடகா தமிழக 4 மாத 450 டிஎம்சி தண்ணீர் திறப்புமேலும் செய்திகள்
'கட்சிகளிடம் ஒற்றுமையில்லாததால் 2019ல் மீண்டும் பாஜக ஆட்சி': மாநிலங்களவையில் பாஜக அரசை உப்புமாவுடன் ஒப்பிட்டு விமர்சித்த திருச்சி சிவா..!!
இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கில் ஸ்ரீகாளஹஸ்தியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி
வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்-4 மணிநேரம் தரிசனம் ரத்து
ஆன்லைன் சூதாட்டத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுமா?: மக்களவையில் காங். எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்..!!
மக்களவையில் பாரிவேந்தர் எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்
விசாகப்பட்டினத்தில் தாறுமாறாக ஓடிய கார் தூக்கி வீசப்பட்ட நபர்கள் படுகாயம்: போலீசார் விசாரணை
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!