கோயில் ஊழியர்கள் நியமனம் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
2022-10-01@ 00:04:38

புதுடெல்லி: தமிழகத்தில் உள்ள கோயில்களை நிர்வகிப்பது தொடர்பாக 6 வாரங்களில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘தமிழகத்தில் அரசு ஊழியர்களை கோயில் பணிகளுக்கு தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. இவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர்களுக்கு கோயில் வருமானத்தில் இருந்து வழங்கப்பட்ட ஊதியத்தை திரும்பப்பெற்று, கோயிலுக்கு செலுத்த உத்தரவிட வேண்டும்,’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.ஆர்.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ‘கோயில்களின் நலன் கருதி, அறநிலையத்துறை ஊழியர்களை தற்காலிகமாக நியமித்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை,’ என கூறிய வழக்கை முடித்து வைத்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டி.ஆர்.ரமேஷ் மேல்முறையீடு செய்துள்ளார். நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவுக்கு 6 வாரத்தில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
Tags:
Temple employees Appointment Government of Tamil Nadu Supreme Court கோயில் ஊழியர்கள் நியமனம் தமிழக அரசு உச்ச நீதிமன்றம்மேலும் செய்திகள்
‘பதான்’ படம் நல்லாதானே இருக்கு: ஆளுங்கட்சிக்கு திரிணாமுல் எம்பி குட்டு
டெல்லியில் இளம்பெண் கொலை வழக்கு; பகலில் இருவருக்கும் மதிய உணவு இரவில் ஒருவருக்கு சிக்கன் ரோல் ஆர்டர்: குற்றப்பத்திரிகையில் ‘லிவ்-இன்’ காதலனின் பகீர் வாக்குமூலம்
கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்தியுள்ளோம்: மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரை
பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை கண்டித்து 2-வது நாளாக கொச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்: ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு
பிரதமரால் தொழிலதிபர்களை அச்சுறுத்த முடியவில்லையா?: அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்?.. காங். தலைவர் கடும் தாக்கு..!!
திருமணமான சில மாதங்களில் சண்டை கணவர் தாக்கியதில் நடிகையின் முகம் வீங்கியது: நகை, பணத்தை அள்ளிச் சென்றதாக புகார்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!