தி.மு.க தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிப்பு: பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேதியும் வெளியானது
2022-10-01@ 00:04:19

சென்னை: திமுகவில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நடைபெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15வது பொதுத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகுதியுள்ள ஒன்றிய, நகர, நகரிய, பேரூர் - பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகர செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அடங்கிய புதிய பொதுக்குழு கூட்டம் 9.10.2022ல் காலை 9 மணிக்கு சென்னை, அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும்.
அப்போது திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும். மேற்கண்ட பொறுப்புகளுக்கான வேட்புமனுக்கள் 7.10.22ல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் தலைமைக் கழகத்தில் பெற்றுக்கொள்ளப்படும். இப்பொறுப்புகளுக்குப் போட்டியிடுவோர் வேட்புமனுக் கட்டணமாக ரூ.50,000 அளித்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக்குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர்களைப் பொதுக்குழு உறுப்பினர்கள் (தலைமைச் செயற்குழு உறுப்பினர் உட்பட) ஐவர் முன்மொழிய, ஐவர் வழி மொழிய வேண்டும். அனைத்து நடைமுறைகளிலும் திமுக தேர்தல் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:
DMK president post election date general secretary treasurer post date also released தி.மு.க தலைவர் பதவி தேர்தல் தேதி பொதுச்செயலாளர் பொருளாளர் பதவி தேதியும் வெளியானதுமேலும் செய்திகள்
கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் 300 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்த சித்தூர் எம்எல்ஏ-தெலுங்குதேசம் கட்சி பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு
ஓபிஎஸ் தரப்பினர் பேட்டி இபிஎஸ் தரப்புக்கு சின்னம் போனதால் பின்னடைவு இல்லை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எடப்பாடி அணி வேட்பாளருக்கு பாஜ முழு ஆதரவு அளிக்கும்: அண்ணாமலை அறிவிப்பு
தமிழ் மகன் உசேன் பேட்டி தேர்தல் பிரசாரத்துக்கு ஓபிஎஸ் அழைக்கப்படுவாரா?
காவிரி பாசன மாவட்டங்களில் 2 ஆயிரம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பு: 24ம் தேதி ஈரோடு சுற்றுப்பயணம் விவரம் வெளியீடு
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!