எதையும் படிக்காமல் வாட்ஸ் அப்பில் வருவதை படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களை கண்டுகொள்ள வேண்டாம்: ட்விட்டர் ஸ்பேஸில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
2022-09-30@ 21:58:03

சென்னை: வரலாறு, கொள்கை இல்லாதவர்கள் பொய்களை பரப்பி வருகின்றனர் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் கடைபிடிக்கப்படும் திராவிட மாதத்தின் கடைசி நாளான இன்று அவர் ட்விட்டரில் தெரிவித்தார். செய்தியின் உண்மை தன்மையை அறிந்து கொண்டு சமூக வலைதளத்தில் பகிர வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தைத் திராவிட மாதமாகக் கொண்டாடும் வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ட்விட்டர் ஸ்பேஸில் 'திராவிடத்தைக் கொண்டாடுவோம்' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த தளத்தின் வாயிலாக திமுகவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்று உரையாற்றினர்.
இன்றுடன் செப்டம்பர் மாதம் முடிவடைய உள்ளதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 8 மணிக்கு ட்விட்டர் ஸ்பேஸில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்; திராவிடம் தமிழருக்கு தன்னம்பிக்கை ஊட்டியது, சமூக நீதியை நிலை நாட்டியது. திராவிடம் பெண்களுக்கு சம உரிமையை பெற்று தந்தது, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது. திராவிடம் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை தலை நிமிரவைத்தது.
தொழில் நுட்பத்தை தமிழகத்தின் வளர்ச்சிக்கும் கழகத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும். எதையும் படிக்காமல் வாட்ஸ் அப்பில் படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களுக்கு பதில் சொல்லி திருத்த முடியாது. இணையத்தில் இயங்கும் நீங்கள் உங்கள் காலத்தை ஆக்கப்பூர்வமாக செலவு செய்யுங்கள்.
நமது சாதனைகளை சொல்லுங்கள், நமது கொள்கையை சொல்லுங்கள் தவறான தகவலாக இருந்தால் அதற்கு உண்மையான தகவலை சொல்லுங்கள். நமது எதிரிகள், மதவாத சாதியவாத சக்திகள் அவதூறு பேசுவார்கள் கொச்சையாக பேசுவார்கள், கோபப்படுத்த பேசுவர்கள், இவை அனைத்தையும் புறந்த தள்ளிவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்படுவோம்' என ட்விட்டர் ஸ்பேஸில் முதல்வர் முக.ஸ்டாலின் உரையாற்றினார்.
மேலும் செய்திகள்
உள்வாடகைக்கு விட்டதால் ரூ.20 கோடி மதிப்பு கோயில் கடைக்கு சீல்
கருத்துரிமையை பறிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ரவுடிகள் செல்போனை பறித்ததால் 4 கார் கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமி: பொதுமக்கள் அடித்து உதைத்தனர்
பர்னிச்சர் குடோனில் தீ விபத்து: 4 மணி நேரம் போராடி அணைப்பு
தனியார் பேருந்து மோதி இந்திரா காந்தி சிலை உடைந்ததால் பரபரப்பு
சொத்துவரி கட்டாத 6 கடைகளுக்கு சீல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!