சோழவந்தான் அருகே திருவேடகம் கோயிலில் குரங்குகள் அட்டகாசம்: பக்தர்கள் அவதி
2022-09-30@ 20:14:57

சோழவந்தான்: சோழவந்தான் அருகே கோயிலில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழவந்தான் அருகே திருவேடகத்தில் வரலாற்று சிறப்பு மிக்க எழவார் குழலி சமேத ஏடகநாதர் எனும் சிவாலயம் உள்ளது. இங்கு பிரதோஷம் உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
படைக்கும் கடவுளான பிரம்மன் இங்கு வழிபட்டு தான் படைப்பு தொழிலை மேற்கொண்டதாக வரலாறு கூறுகிறது. மேலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்கள், இங்குள்ள வைகையில் நீராடி விட்டு இக்கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி வழிபடுவார்கள். தினமும் அதிக பக்தர்கள் வந்து செல்லும் இக்கோயிலில் குரங்குகள் கூட்டமாக திரிகின்றன.
கோயில் கோபுரம், மேற்கூரை, கொடிமரம் மற்றும் வளாகத்தில் கும்மாளமிடும் குரங்குகளால் சிலைகள், கோபுர புதுமைகள் பாதிப்பிற்குள்ளாகிறது. மேலும் கூட்டமாக வரும் இக்குரங்குகள் பக்தர்களையும் துன்புறுத்தி வருகின்றன. எனவே பொதுமக்கள் மற்றும் கோயில் பாதுகாப்பு கருதி, இக்குரங்குகளை பாதுகாப்புடன் பிடித்து வனப்பகுதியில் விட ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
வாணியம்படி அருகே தேசிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்: நடவடிக்கைக்கு பொதுமக்கள் கோரிக்கை
திருப்பத்தூர் அருகே ரூ.11 கோடியில் ஜவ்வாதுமலை-புதூர்நாடு சாலை பணி: மார்ச் இறுதிக்குள் முடியும் என கோட்ட பொறியாளர் தகவல்
சேலம்-நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசுவாமி கோயிலில் நாளை தைப்பூசத்திருவிழா தேரோட்டம்
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எதிரொலி: தொப்பூர் கணவாயில் விபத்து உயிரிழப்பு குறைந்தது
ஈரோட்டில் ஆதியோகி ரத யாத்திரை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம்
விடாமல் தொடரும் கனமழை: தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!