நீட் தேர்வு விவகாரம்: முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கைக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்..!!
2022-09-30@ 18:02:30

டெல்லி: நீட் தேர்வின் தாக்கம் குறித்து முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கைக்கு தடை கோரி தொடுக்கப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. முதற்கட்டமாக நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கருத்து கேட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதலமைச்சரிடம் 165 பக்க அறிக்கையாக சமர்ப்பித்தது.
அதில் பெரும்பாலானோர் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ராஜன் குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் குழு அமைத்தது சரியே என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும் செய்திகள்
முதல் கணவர் மரணம், 2வது கணவருடன் வாழ பிடிக்கவில்லை; 70 வயது மாமனாரை கல்யாணம் செய்து கொண்ட 28 வயது பெண்
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை அம்ரித் உதயான் என மாற்றியது ஒன்றிய அரசு: காங்கிரஸ் கட்சி கண்டனம்
31ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்; கிழக்கு லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு?.. கூட்டத் தொடரில் குரல் எழுப்ப காங். முடிவு
பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவர்களுக்கு வாந்தி, குமட்டல்
55 பயணிகளை விட்டுவிட்டு சென்ற விமான நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்
பீகாரில் சிலை கரைப்பு ஊர்வலத்தில் வாலிபர் சுட்டுக் கொலை
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!