இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
2022-09-30@ 15:22:59

டெல்லி: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் சிஜின் என்பவர் தொடர்ந்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அனிருந்த பொஸ் மற்றும் விக்ரம்நாத் அமர்வில் விசாரணைக்காக வந்த போது ஆஜரான சிஜின் 90-ருக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளதால்.
அவரது குடும்பத்தினர் வருமானம் இன்றி தத்தளிப்பதாக கூறினார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதலும், துப்பாக்கி சுடுகளும் தொடர்வதாக முறையிட வழக்கறிஞர், இந்த பிரச்சனையை தீர்க்க உடனடியாக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கூறினார்.
இதற்க்கு பதிலளித்த ஜெனரல் நடராஜன், இது இருநாடுகள் தொடர்புடைய பிரச்சனை என்பதால் ஒன்றிய அரசு ராஜாங்க ரீதிலான பேச்சுவார்த்தைகளுக்கு முயற்சி செய்து வருவதாக கூறினார். அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள் எத்தனை காலம்தான் தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறையில் அவதி பட வேண்டும் என்று கேள்வியெழுப்பினார்.
பின்னர் தமிழக மீனவர்களை மீட்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகள்
முதல் கணவர் மரணம், 2வது கணவருடன் வாழ பிடிக்கவில்லை; 70 வயது மாமனாரை கல்யாணம் செய்து கொண்ட 28 வயது பெண்
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை அம்ரித் உதயான் என மாற்றியது ஒன்றிய அரசு: காங்கிரஸ் கட்சி கண்டனம்
31ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்; கிழக்கு லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு?.. கூட்டத் தொடரில் குரல் எழுப்ப காங். முடிவு
பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவர்களுக்கு வாந்தி, குமட்டல்
55 பயணிகளை விட்டுவிட்டு சென்ற விமான நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்
பீகாரில் சிலை கரைப்பு ஊர்வலத்தில் வாலிபர் சுட்டுக் கொலை
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!