காதல் திருமணம் செய்த வாலிபர் கொலையில் மனைவி, மாமனாருக்கு ஆயுள் தண்டனை: மயிலாடுதுறை கோர்ட் தீர்ப்பு
2022-09-30@ 00:40:35

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே காதல் திருமணம் செய்த வாலிபரை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் மாமனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டது. மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் போலீஸ் சரகத்துக்குட்பட்ட அப்புராஜபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கலைமதி (30). இவரும், சதீஷ்குமார் (30) என்பவரும் காதலித்து கடந்த 2019ல் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில மாதங்களிலேயே கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கலைமதி தந்தை நாகராஜன் (60) வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் 2019 மே 12ம் தேதி சதீஷ்குமார், மனைவியை அழைத்து வர மாமனார் நாகராஜன் வீட்டுக்கு சென்றார்.
அப்போது அங்கு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. திடீரென நாகராஜன் கத்தியால் சதீஷ்குமாரை குத்தினார். கலைமதி செங்கல்லை எடுத்து கணவரை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சதீஷ்குமார் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து பொறையார் போலீசார் வழக்குப்பதிந்து நாகராஜன், கலைமதி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கை மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி இளங்கோ விசாரித்து நாகராஜன், கலைமதி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
மேலும் செய்திகள்
சேலம்-நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசுவாமி கோயிலில் நாளை தைப்பூசத்திருவிழா தேரோட்டம்
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எதிரொலி: தொப்பூர் கணவாயில் விபத்து உயிரிழப்பு குறைந்தது
ஈரோட்டில் ஆதியோகி ரத யாத்திரை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம்
விடாமல் தொடரும் கனமழை: தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
பழைய பாலம் கடும் சேதம் பாம்பன் புதிய பாலத்தில் இனி ரயில்கள் இயங்கும்: மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசை கண்டித்து பள்ளி சீருடையில் சென்ற திமுக எம்எல்ஏக்கள்: 24 நிமிடங்களில் முடிந்தது குளிர்கால கூட்டம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!