பாலியல் புகார் தெரிவித்த ஊட்டி அரசு கல்லூரி உதவி பேராசிரியை இட மாற்றம்: வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு
2022-09-30@ 00:39:33

ஊட்டி: ஊட்டி அரசு கலை கல்லூரியில் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியையாக பணியாற்றுபவர் பிரவீணாதேவி. நேற்று முன்தினம் இவரை திருப்பூர் மாவட்டம் காங்கயம் அரசு கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு வந்துள்ளது. இது தொடர்பாக பிரவீணாதேவி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘கடந்த பிப்ரவரி மாதம் உதவி பேராசிரியர் தர்மலிங்கம் எனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார். கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கலெக்டர், எஸ்பி, கல்லூரி கல்வி இயக்குநரகம், மண்டல இயக்குநர், கல்லூரி கல்வி இயக்ககம், மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறைக்கும் புகார் அளித்தேன்.
அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் உதவி பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் என்னை பழிவாங்கும் விதமாக காங்கயம் அரசு கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்துள்ளனர். உதவி பேராசிரியரின் சஸ்பெண்டை ரத்து செய்து மீண்டும் பணி வழங்கியுள்ளனர். இதை திரும்ப பெற வேண்டும்’’ என்றார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எபினேசர் கூறுகையில், ‘‘ உதவி பேராசிரியை பணியிட மாற்றம் வழக்கமானதுதான்’’ என்றார்.
மேலும் செய்திகள்
மேலவளவு முருகேசன் கொலை வழக்கு!: 13 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யகோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4-ம் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஒரே நாளில் நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
திருமழிசையில் மண்புழு உரம் தயார் செய்யும் பணி
மறைமலைநகர் அருகே பட்டாக்கத்தியுடன் சுற்றி மிரட்டிய வாலிபர் கைது
காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவு தினம் திமுகவினர் அமைதி பேரணி அனைத்துகட்சியினர் மரியாதை
டெல்டாவில் நள்ளிரவு வரை மழை; அறுவடைக்கு தயாராக இருந்த 70,000 ஏக்கர் சம்பா மூழ்கியது: 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!