71 மாவட்டங்களுக்கான பட்டியல் வெளியீடு; திமுகவில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றம்: தென்காசி வடக்கு மாவட்ட தேர்தல் முடிவு நிறுத்தி வைப்பு
2022-09-30@ 00:28:52

சென்னை: திமுகவில் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். தென்காசி வடக்கு மாவட்ட தேர்தல் முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் 15வது பொதுத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட அமைப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் நடந்தது. அதாவது, மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், துணைச் செயலாளர்கள்உள்பட பல்வேறு பொறுப்புக்களுக்கான வேட்புமனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடந்தது. இந்த மனுக்கள் மீது 26, 27ம் தேதிகளில் பரிசீலனை நடந்தது.
தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு திமுகவில் கட்சி ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதாவது, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த செங்குட்டுவன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மதியழகன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த இன்பசேகரன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த மூர்த்தி மாற்றப்பட்டு, மதுரா செந்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவை தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த வரதராஜன் மாற்றப்பட்டு புதிய மாவட்ட செயலாளராக தளபதி முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சி.ஆர்.ராமச்சந்திரன் மாற்றப்பட்டு தொண்டாமுத்தூர் ரவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஏனாதி பாலசுப்பிரமணியன் மாற்றப்பட்டு அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த பூபதி மாற்றப்பட்டு, திருத்தணி எம்எல்ஏ சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன் அதிமுகவில் கடந்த 2011 முதல் 2016ம் ஆண்டு வரை உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். அதன் பிறகு அமமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருந்தார். தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் தேர்வு முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம்; காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் என 4 முனை போட்டி: முற்றுகையிட்டு வரும் கட்சி தலைவர்களால் சூடுபிடித்த இடைத்தேர்தல்
அதானி பங்கு வீழ்ந்ததை போல் மோடியும் வீழ்வார்: மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி பேச்சு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியல் வெளியீடு: ஓபிஎஸ் அணி பட்டியல் நிராகரிப்பு
கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் 300 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்த சித்தூர் எம்எல்ஏ-தெலுங்குதேசம் கட்சி பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு
ஓபிஎஸ் தரப்பினர் பேட்டி இபிஎஸ் தரப்புக்கு சின்னம் போனதால் பின்னடைவு இல்லை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எடப்பாடி அணி வேட்பாளருக்கு பாஜ முழு ஆதரவு அளிக்கும்: அண்ணாமலை அறிவிப்பு
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!