விவாகரத்துக்கு பிறகு குழந்தையை காணவரும் கணவருக்கு டீ தர வேண்டும் என்ற உத்தரவு ரத்து: ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு
2022-09-30@ 00:27:00

சென்னை: விவாகரத்தான பிறகு குழந்தையை காண வரும் முன்னாள் கணவருக்கு தேநீர் கொடுத்து உபசரிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. விவாகரத்து மூலம் பிரிந்த கணவன், மனைவிக்கு பிறந்த குழந்தையை சந்திக்க கோரி கணவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பிரிந்து வாழும் தம்பதியர், தங்களை கணவன்- மனைவியாக கருதாமல், விருந்தினர்களாக கருத வேண்டும். குழந்தையுடன் சேர்ந்து அவர்களும் உணவருந்த வேண்டும். குழந்தையை காண வரும் முன்னாள் கணவருக்கு தேநீர் வழங்கி உபசரிக்க வேண்டும்.
அரியானா மாநிலம் குருகிராமில் வேலை பார்க்கும் முன்னாள் மனைவியை சென்னையில் தங்கியிருந்த, கணவன் குழந்தையை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் மனைவி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குருகிராமில் பணியாற்றும் மனுதாரரால் சென்னைக்கு வர முடியாது. குழந்தையை காண உரிமை கோரிய வழக்கில், குழந்தையை காண வரும் முன்னாள் கணவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தனி நீதிபதி போதனை செய்ய முடியாது என்று வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், குழந்தையை காண வரும் முன்னாள் கணவருக்கு தேநீர் வழங்கி உபசரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை தனி நீதிபதி தனது அதிகார வரம்பை மீறி பிறப்பித்துள்ளார் எனக்கூறி மனுதாரர் கோரிக்கை ஏற்று தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், குழந்தையை காண விரும்பினால் முன்னாள் கணவர், முன்கூட்டி தகவல் தெரிவித்து, குருகிராம் சென்று சந்திக்கலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகள்
பிரபல இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!