எச்ஒன்பி விசாவுக்கு விண்ணப்பித்தவர்கள் உட்பட 80 லட்சம் பேருக்கு கிரீன் கார்டு: அமெரிக்க நாடாளுமன்றம் புதிய மசோதா அறிமுகம்
2022-09-30@ 00:02:55

வாஷிங்டன்: அமெரிக்காவில் எச்ஒன்பி மற்றும் நீண்ட காலமாக விசாவுக்கு காத்திருப்போர் உட்பட சுமார் 80 லட்சம் பேருக்கு கிரீன் கார்டு வழங்குவதற்கு வகை செய்யும் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. அமெரிக்காவில் ஆண்டு தோறும் இந்தியா உட்பட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக குடியேறுகின்றனர். அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற வேண்டுமானால் கிரீன் கார்டு பெற வேண்டியது அவசியமாகும். இதன் காரணமாக கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. எனினும் பல்வேறு காரணங்களால் கிரீன் கார்டு பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. இந்நிலையில், கிரீன் கார்டு வழங்குவது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று புதிய மசோதாவை ஜனநாயக கட்சி செனட்டர்கள் 4 பேர் அடங்கிய குழு அறிமுகம் செய்தது. இந்த மசோதாவானது எச்-ஒன்பி மற்றும் நீண்ட காலமாக விசா பெற காத்திருப்போர் உட்பட சுமார் 80 லட்சம் பேர் விசா பெறுவதற்கு வகை செய்யும்.
Tags:
HONB Visa Applicants 80 Lakhs Green Card US Parliament New Bill Introduction எச்ஒன்பி விசா விண்ணப்பித்தவர்கள் 80 லட்சம் பேரு கிரீன் கார்டு அமெரிக்க நாடாளுமன்றம் புதிய மசோதா அறிமுகம்மேலும் செய்திகள்
குண்டுவெடிப்பில் 101பேர் பலி எதிரொலி; பாகிஸ்தானில் போலீசுக்கே பாதுகாப்பில்லை: ஆர்ப்பாட்டத்தில் குதித்த போலீசார்
அபுதாபியில் இருந்து புறப்பட ஏர் இந்தியா விமானதில் நடுவானில் தீ: அவசரமாக தரையிறக்கம்
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.57 கோடியாக அதிகரிப்பு
இந்தியாவுடனான உறவு நீடிக்கும் பிபிசியின் சுதந்திரத்தை அரசு பாதுகாக்கும்: இங்கிலாந்து அறிவிப்பு
அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சவாளி நிக்கி ஹாலே போட்டி?
நிலக்கரிக்கு அதிக கட்டணம் அதானி ஒப்பந்தம் மறுபரிசீலனை: வங்கதேசம் அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!