தென்காசி மாவட்டத்தில் பாசன பருவகாலத்திற்கு தேவையான தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை
2022-09-29@ 18:00:16

தென்காசி: தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீரின் அளவு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர் வரத்தினை கருத்தில் கொண்டு, அடவிநயினார்கோவில் பாசனம் - மேட்டுக்கால், கரிசல்கால், பண்பொழிகால், வல்லாக்குளம்கால், இலத்தூர்கால், நயினாரகரம்கால், கிளங்காடுகால், கம்பளிக்கால், புங்கன் கால், சாம்பவர் வடகரை கால்வாய் மற்றும் இரட்டைகுளம் கால்வாய் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்களுக்கு 1432-ம் பசலி பிசான சாகுபடி செய்வதற்கு அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து 30.09.2022 முதல் 26.02.2023 வரை 150 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 100 க.அடி அளவுக்கு மிகாமல் பாசன பருவகாலத்தின் மொத்த தேவையான தண்ணீர் அளவான 955.39 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தென்காசி மாவட்டம், செங்கோட்டை, தென்காசி மற்றும் கடையநல்லூர் ஆகிய வட்டங்களில் 7643.15 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம், கருப்பாநதி பாசனம் - பெருங்கால், பாப்பான்கால், சீவலன்கால், இடைக்கால், கிளங்காடுகால் மற்றும் ஊர்மேலழகியான்கால் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்களுக்கு 1432-ம் பசலி பிசான சாகுபடி செய்வதற்கு கருப்பாநதி நீர்த்தேக்கத்திலிருந்து 30.09.2022 முதல் 26.02.2023 வரை 150 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 25 க.அடி அளவுக்கு மிகாமல், பாசன பருவகாலத்தின் மொத்த தேவையான 1189.34 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டத்தில் 9514.70 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.
மேலும் செய்திகள்
இடைத்தேர்தல் சோதனை கெடுபிடிகள் பணம் கொண்டு செல்லும் வியாபாரிகளுக்கு ரசீது: உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ. 1.74 லட்சம் பறிமுதல்
பனி பாதி... மேகம் மீதி.... கொடைக்கானலில் பகலிலும் கும்மிருட்டு: வாகன ஓட்டிகள் சிரமம்
தாராபுரம் அருகே மீண்டும் பரபரப்பு அமராவதி ஆற்றில் ராட்சத முதலை நடமாட்டம்
புதுச்சேரியில் பெண்கள் போலீசார் இடையே தள்ளு முள்ளு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு அணிவகுத்து செல்லும் பாதயாத்திரை பக்தர்கள்: பிப்.5ம் தேதி தைப்பூச திருவிழா
கைத்திறமையால் காசாகும் கழிவுப் பொருட்கள் வெளிநாடு செல்லும் பெண் கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள்: நெல்லை அருகே சத்தமின்றி சாதிக்கும் மகளிர்கள்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!