டி20 உலகக் கோப்பையில் இருந்து எலும்பு முறிவு காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விலக உள்ளதாக தகவல்!!
2022-09-29@ 17:06:24

மும்பை: டி20 உலகக் கோப்பையில் இருந்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா எலும்பு முறிவு காரணமாக விலக உள்ளதாக பிசிசிஐ தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஜஸ்பிரித் பும்ரா எலும்பு முறிவு காரணமாக விலக உள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்க அணியுடனான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக உள்ளதாக சமீப காலமாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் நேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 106 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி விமர்சனங்களுக்கான தகுந்த பதிலடி கொடுத்தது இந்திய அணி.
இந்நிலையில் அக்டோபர் 6-ம் தேதி தொடங்க உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய ஆஸ்திரேலியா செல்ல உள்ளது. தற்போது டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து எலும்பு முறிவு காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விலக உள்ளதாக தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
இன்று முதல் டி20 ராஞ்சி களத்தில் இந்தியா-நியூசி
ஆஸி ஓபன் டென்னிஸ் பைனலில் ரைபாகினா சபலென்கா
பள்ளிகளுக்கான வாலிபால் போட்டி: சென்னை பள்ளிகள் சாம்பியன்; அமைச்சர் அன்பில் கோப்பைகளை வழங்கினார்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழ்நாட்டை சுருட்டிய ஜடேஜாக்கள்: சரண்டரான சவுராஷ்டிரா
கலப்பு இரட்டையரில் இறுதி போட்டிக்கு தகுதி; பட்டம் வெல்ல விரும்புகிறேன்: சானியா மிர்சா பேட்டி
கே.எல்.ராகுல் -அதியா ஷெட்டிக்கு டோனி பைக், கோஹ்லி கார் பரிசு: ரூ50 கோடி மதிப்பு அடுக்குமாடி வீடு கொடுத்த மாமனார்
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!