தஞ்சாவூர் பெரிய கோயிலில் வெளிப்புற மதில் சுவர் சீரமைக்கும் பணி மும்முரம்
2022-09-29@ 12:53:18

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயில் வெளிப்புற மதில் சுவர் சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் பெரிய கோயில் சிறப்பு மிக்க சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். அங்கு தினமும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிறப்பு மிக்க ஓவியங்கள், வரைபடங்கள் மற்றும் கோயில் வெளிப்புறங்களில் புகைப்படங்கள் எடுத்து செல்வது வழக்கம். அனைத்து பிரதோஷ காலங்களிலும் தஞ்சாவூர் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சிறப்பு மிக்க கோயிலின் வெளிப்புற மதில் சுவர் பழுதடைந்துள்ளது. இதனால் தற்போது மதில் சுவர் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. செங்கல்,சிமெண்ட் பயன்படுத்தாமல், பாரம்பரிய முறைப்படி சுண்ணாம்புகல், வெல்லம், கடுக்காய் உள்ளிட்ட பொருட்கள் கலவையாக கொண்டு செங்கல் தயாரிக்கப்படுகிறது. அதன் பிறகு சுவர் எழுப்பும் பணி நடைபெறுகிறது. இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகள்
கொடைக்கானலுக்கு வரும் வெளியூர் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் உயர்ந்தது
ரூ.784 கோடியில் பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம் கல்வியும், மருத்துவமும் இரண்டு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
குடிநீர் தொட்டியில் இன்ஜினியர் சடலம் மீட்பு அமைச்சர், டிஐஜி நேரில் விசாரணை
தாலி கட்டும் நேரத்தில் மணமகன் ஓட்டம் மண்டபத்துக்கு வந்தவர் மாப்பிள்ளை ஆனார்
விஐடி பல்கலையில் கலைஞர் மாணவர் விடுதி, பேர்ல் ஆராய்ச்சி கட்டிடம் திறப்பு தமிழகத்தில் மாபெரும் கல்வி புரட்சி: தனியார் கல்வி நிறுவனங்களும் பங்களிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
திருப்பூரில் வட இந்தியர்கள் உள்ளூர் ஆட்களிடம் சண்டையில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு.!
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!