சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் செயல்பட்ட சன் பார்மா மருந்து ஆலைக்கு ரூ.10 கோடி அபராதம்; தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
2022-09-29@ 12:13:51

சென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் செயல்பட்டு வரும் சன் பார்மா மருந்து ஆலை சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்ததால் ரூ.10 கோடி அபராதம் விதித்தது தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம். 1994 முதல் 2006வரை ஆலையில் நடந்த விரிவாக்கப் பணிகளுக்கு EIA NOTIFICATION 1994ன் கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெறாததால் விரிவாக்கம் செய்தது சட்டவிரோதம் எனவும் தீர்ப்பு.
ஆலை செயல்பாட்டால் உண்டான சேதம் குறித்து மாசு கட்டுப்பாடு வாரியம் உரிய ஆய்வு செய்து முழுமையான இழப்பீட்டை சன் பார்மாவிடம் இருந்து பெற வேண்டும் எனவும் அந்தத் தொகையை வைத்து பறவைகள் சரணாலயத்தைப் பாதுகாக்க செயல் திட்டம் உருவாக்க வேண்டும் எனவும் தீர்ப்பு. சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் சன் பார்மா ஆலை இயங்கி வருவதால் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.ஆர்.தியாகராஜன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் 2020ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில் இன்று தீர்ப்பு.
ஆலையின் விரிவாக்கத்திற்கு மார்ச் 2022ம் ஆண்டில் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராகத் தொடரப்பட்ட மனு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இரண்டாவது அமர்வில் நிலுவையில் இருப்பதால் ஆலையை மூடுவது குறித்து இந்த மனுவில் உத்தரவிடவில்லை எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:
சுற்றுச்சூழல் அனுமதி சன் பார்மா மருந்து ஆலை ரூ.10 கோடி அபராதம் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்மேலும் செய்திகள்
ஆவினில் காலி பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மாநில அளவிலான வனத்தீ மேலாண்மை குறித்த கருத்துப் பட்டறை
அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் விளக்கு பகுதி காவலர் குடியிருப்புக்கு ஆபத்து?.. சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் பரபரப்பு
ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஓபிசி கிரீமிலேயர் வரம்பு போதுமானது என்பதா?: ரூ.15 லட்சமாக உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல்..!!
பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் நிலைய 2ம் கட்ட பணி; வாகன பார்க்கிங் அமைக்க கடைகளை அகற்ற முடிவு: வியாபாரிகள் எதிர்ப்பு
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத்தலைவர், உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அரசுக்கு அன்புமணி கோரிக்கை!!
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!