காவல் அருங்காட்சியக முதலாண்டு நிறைவுநாள்: 195 மாணவர்களுக்கு பரிசு
2022-09-29@ 01:22:41

சென்னை: எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் தொடங்கி, ஓராண்டு நிறைவு அடைந்ததை முன்னிட்டு கடந்த 14ம் தேதி முதல் 26ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு, விவாதமேடை, மாறுவேடப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. நேற்று மாலை 4 மணியவில் காவல் அருங்காட்சியகத்தில் நடந்த முதலாம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழாவில், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் போட்டிகளில் வெற்றி பெற்ற 52 மாணவர்கள் மற்றும் 143 மாணவர்கள் என மொத்தம் 195 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
ஓராண்டு நிறைவுநாளான நேற்று ஒருநாள் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட இலவச அனுமதி வழங்கப்பட்டது. மேலும், மன்னர் காலத்தில் காவல் அதிகாரிகள் அணிந்திருக்கும் உடை அணிந்த 250 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழங்கால சிலை திறக்கப்பட்டு, அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டது. இதில், காவல்துறை இயக்குனர்கள் ஷகீல் அக்தர் (சிபிசிஐடி), சீமா அகர்வால் (சீருடை பணியாளர் தேர்வாணையம்), தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், சென்னை காவல் கூடுதல் ஆணையர்கள் அன்பு, பிரேம் ஆனந்த் சின்ஹா, லோகநாதன், கபில்குமார் சரட்கர், காவல் இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
உயிர் நீத்த காவல் துறையினருக்கு இறுதி மரியாதை தொடர்பாக அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை.!
வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் இன்று வழங்கப்படும் என அறிவிப்பு: உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இபிஎஸ் அணி நடவடிக்கை!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கன மழை காரணமாக நெற்பயிர் பாதித்த உழவர்களுக்கு உரிய இழப்பீடு அன்புமணி வலியுறுத்தல்
அண்ணா நினைவுநாளையொட்டி இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை
4 லட்சம் பேர் எழுதுகின்றனர் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடங்கியது: சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!