தெருநாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டும்: கேரள அரசு மனு
2022-09-29@ 00:23:16

திருவனந்தபுரம்: தெரு நாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் வாகனங்களிலும் செல்லும் சிறுவர்கள், வயதானவர்கள் உள்பட அனைவரும் நாய்களின் தாக்குதலுக்கு இரையாகி வருகின்றனர். இந்த வருடம் 9 மாதத்தில் மட்டும் நாய்களின் தாக்குதலுக்கு 21 பேர் பலியாகி உள்ளனர். இந்த தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து வெறி பிடித்த தெரு நாய்களை கொல்ல வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. கேரளாவில் பல பஞ்சாயத்துகள் தெரு நாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்நிலையில் கேரள அரசு சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தெரு நாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை கண்டித்து 2-வது நாளாக கொச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்: ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு
பிரதமரால் தொழிலதிபர்களை அச்சுறுத்த முடியவில்லையா?: அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்?.. காங். தலைவர் கடும் தாக்கு..!!
திருமணமான சில மாதங்களில் சண்டை கணவர் தாக்கியதில் நடிகையின் முகம் வீங்கியது: நகை, பணத்தை அள்ளிச் சென்றதாக புகார்
ஓடும் பைக்கில் ‘ரொமான்ஸ்’: காதல் ஜோடி மீது போலீஸ் வழக்கு
ரூ38 கோடி மோசடி வழக்கில் தெலுங்கு நடிகர் கைது: ஐதராபாத் போலீஸ் அதிரடி
ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!