ஓட்டல் ஊழல் வழக்கு தேஜஸ்வி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
2022-09-29@ 00:23:15

புதுடெல்லி: ஐஆர்சிடிசி ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐஆர்சிடிசி) 2 ஓட்டல்களை பராமரிக்கும் ஒப்பந்தத்தை 2 தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்தார். இதற்கு கைமாறாக, பாட்னாவில் 3 ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் லாலு, அவருடைய மனைவி ரப்ரிதேவி, லாலுவின் மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உட்பட 12 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்கள் ஜாமீனில் உள்ளனர். இந்நிலையில், ஜாமீன் நிபந்தனைகளை மீறி தேஜஸ்வி செயல்படுவதால், அவருடைய ஜாமீனை ரத்து செய்யும்படி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. இது, சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அடுத்த மாதம் 18ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி தேஜஸ்விக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
* வெளிநாடு செல்ல லாலுவுக்கு அனுமதி
லாலு பிரசாத் யாதவ் பல்வேறு உடல்நிலை பாதிப்பால் அவமதிப்பட்டு வருகிறார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அக்டோபர் 10ம் தேதி முதல் 25ம் தேிவரை சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதி கேட்டு, டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அவர் மனு அளித்தார். இதை விசாரித்த நீதிமன்றம், சிங்கப்பூர் செல்ல அவருக்கு அனுமதி வழங்கி உள்ளது.
மேலும் செய்திகள்
ராகுல்காந்தி உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை
சன்னிலியோன் நிகழ்ச்சி அருகே குண்டு வெடிப்பு: மணிப்பூரில் பரபரப்பு
உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு: கொலிஜீயம் பரிந்துரைக்கு அரசு ஒப்புதல்
ஜவுளி துறைக்கு வரப்பிரசாதம் 90% தண்ணீரை குறைக்கும் நானோ தொழில்நுட்பம்: ஐஐடி ரோபர் கண்டுபிடிப்பு
முதலில் ஆன்லைன் தேர்வு அக்னிவீர் ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம்
அதானியின் எப்பிஓ விலகலால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!