ஒன்றிய அரசு பணிக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ்.களை உடனே அனுப்புங்கள்: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுரை
2022-09-29@ 00:23:11

புதுடெல்லி: ஒன்றிய அரசில் பணி செய்வதற்கு மாநிலங்கள் கூடுதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு வலியுறுத்தி உள்ளது. டெல்லியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பணியாளர், பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் பேசிய ஒன்றிய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், ‘‘ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அகில இந்திய சேவை அதிகாரிகளை நியமிப்பது குறித்து, ஏற்கனவே கட்டமைப்பு வகுக்கப்பட்டுள்ளது. இதை உணர்வுபூர்வமாக அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அகில இந்திய சேவை அதிகாரிகளை ஒன்றிய அரசு பணிக்கு மாற்றுவதற்கு ஏதுவாக, மாநிலங்கள் அவர்களை விடுவிக்க வேண்டும். ஒன்றிய அரசில் இந்த அதிகாரிகளுக்கு பற்றாக்குறை உள்ளது. எனவே, இந்த அதிகாரிகளை ஒன்றிய அரசு பணியில் ஈடுபடுத்த, அவர்களை மாநிலங்கள் விடுவிக்க வேண்டும்,’’ என்றார்.
Tags:
Union Govt Jobs IAS IPS. State Union Govt Advice ஒன்றிய அரசு பணி ஐஏஎஸ் ஐபிஎஸ். மாநில ஒன்றிய அரசு அறிவுரைமேலும் செய்திகள்
முதல் கணவர் மரணம், 2வது கணவருடன் வாழ பிடிக்கவில்லை; 70 வயது மாமனாரை கல்யாணம் செய்து கொண்ட 28 வயது பெண்
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை அம்ரித் உதயான் என மாற்றியது ஒன்றிய அரசு: காங்கிரஸ் கட்சி கண்டனம்
31ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்; கிழக்கு லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு?.. கூட்டத் தொடரில் குரல் எழுப்ப காங். முடிவு
பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவர்களுக்கு வாந்தி, குமட்டல்
55 பயணிகளை விட்டுவிட்டு சென்ற விமான நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்
பீகாரில் சிலை கரைப்பு ஊர்வலத்தில் வாலிபர் சுட்டுக் கொலை
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!