காங். தலைவர் தேர்தலில் திக்விஜய் சிங், கார்கே போட்டியிட விருப்பம்: சோனியாவுடன் அந்தோணி சந்திப்பு
2022-09-29@ 00:23:09

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெறுகிறது. இதில்ல, சோனியா காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை. இவர்களின் ஆதரவைப் பெற்ற ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கே, தலைவர் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், கட்சி தலைவர் பதவிக்காக, முதல்வர் பதவியை விட்டுத் தர அவர் மறுத்து வருகிறார். குறிப்பாக, தனது எதிர்ப்பாளரான சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி சென்றுவிடக் கூடாது என்று அவர் கருதுகிறார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை கெலாட் நேற்று டெல்லியில் சந்திந்து பேசுவார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், கடைசி நேரத்தில் அவருடைய டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டது. இன்று அவர் சோனியாவை சந்திப்பார் என தெரிகிறது. தலைவர் தேர்தலில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் சசிதரூர் களமிறங்குவது ஏற்கனவே உறுதியாகி உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களான திக்விஜய் சிங்கும், மல்லிகார்ஜுன கார்கேவும் கூட, தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ.கே. அந்தோணி, டெல்லியில் சோனியாவை நேற்று திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
Tags:
Kong. President election Digvijay Singh Karke to contest Sonia Anthony meet காங். தலைவர் தேர்தல் திக்விஜய் சிங் கார்கே போட்டியிட சோனியா அந்தோணி சந்திப்புமேலும் செய்திகள்
அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்க நடவடிக்கை: ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் திண்ணை பிரசாரம்
அதிமுக அமைப்பு செயலாளராக செந்தில் முருகன் நியமனம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் திடீர் திருப்பம்; ஓபிஎஸ் வேட்பாளர் திடீர் வாபஸ்: பாஜ மிரட்டலுக்கு பணிந்து எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 100 பேர் மீது வழக்கு
அதிமுகவுக்கு ஏற்பட்ட பிணி ஜெயக்குமார்: கு.ப.கிருஷ்ணன் ஒரே போடு
அண்ணாமலைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை: மனு தாக்கலுக்கு பின் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!