அரசு பள்ளி மாணவர்களில் 75 விழுக்காட்டினர் தேர்ச்சி நீட் தேர்வு மாயை தகர்ந்தது: பாமக நிறுவனர் ராமதாஸ் தகவல்
2022-09-29@ 00:22:58

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: அண்மையில் நடைபெற்ற முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் தேர்வுகளில் 7.5% இடஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களில் 75 விழுக்காட்டினரும், பிற மாணவர்களில் 85 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒப்பிட்டளவில் நீட் தேர்வில் மிக அதிக மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி விகிதமும், குறைந்த மதிப்பெண் எடுத்து 7.5% இட ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் கிட்டத்தட்ட சமமாகவே உள்ளது. 10% பெரிய வித்தியாசமல்ல. 7.5% இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களால் மருத்துவ படிப்புக்கு ஈடு கொடுக்க முடியுமா என்று எழுப்பப்பட்ட ஐயங்களை அரசு பள்ளி மாணவர்கள் தகர்த்திருக்கின்றனர். வாய்ப்பும், தரமான கல்வியும் வழங்கப்பட்டால் தங்களால் சாதிக்க முடியும் என்பதை அவர்கள் நிரூபித்திருக்கின்றனர்! நீட்டில் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே மருத்துவத் தேர்வுகளில் வெல்ல முடியும். இட ஒதுக்கீடு கல்வித் தரத்தை குறைத்து விடும் ஆகிய மாயைகளை அரசு பள்ளி மாணவர்கள் தகர்த்திருக்கின்றனர். ஒரே கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்தியுள்ளனர். வாழ்த்துகள்! சமூக நீதி வெல்லட்டும்!!
Tags:
Govt school student 75% pass NEET exam Bamaga founder Ramadas அரசு பள்ளி மாணவர் 75 விழுக்காட்டினர் தேர்ச்சி நீட் தேர்வு பாமக நிறுவனர் ராமதாஸ்மேலும் செய்திகள்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 100 பேர் மீது வழக்கு
அதிமுகவுக்கு ஏற்பட்ட பிணி ஜெயக்குமார்: கு.ப.கிருஷ்ணன் ஒரே போடு
அண்ணாமலைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை: மனு தாக்கலுக்கு பின் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி
இபிஎஸ் போல் பாஜவை தவிர்த்த ஓபிஎஸ்‘தேசிய ஜனநாய கூட்டணி’ என பேனர்: மானத்தை வாங்குறாங்களே என்று குமுறும் நிர்வாகிகள், தொண்டர்கள்
ஓபிஎஸ் அணி, அமமுக வேட்பாளர் உட்பட 16 பேர் வேட்பு மனு தாக்கல்
பால் விலை உயர்வை கைவிட வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!