முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் விக்கிரமராஜா சந்திப்பு: வணிகர் நல வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை
2022-09-29@ 00:11:34

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வணிகர்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்தார். முதல்வரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: வணிகர் நல வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவிப்பதுடன், வணிகர்நல வாரிய உறுப்பினர்கள் நியமனத்துடன் செயல்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண் விற்பனை மையங்களை தவிர்த்து இதர இடங்களில் கொள்முதல் செய்யும் உணவு பொருட்களுக்கு அதிகாரிகள் செஸ் வரி விதிப்பதையும், அப்பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் அதிகாரிகளின் அத்துமீறலை தவிர்த்திடவும் வேளாண் விளை பொருள் அரசாணையை திரும்ப பெற்று உரிய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.வணிக வரித்துறை அதிகாரிகள், சில்லறை வணிக நிறுவனங்களில் டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற பெயரில் ஆய்வு செய்து கடைகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை வணிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி கடைகளில் உள்ள வாடகை முரண்பாடுகளை நீக்கும் வகையில், அதிகாரிகள் மற்றும் வணிகர்கள் அடங்கிய ஒரு உயர் மட்ட குழுவை அமைத்து தீர்வு காண வேண்டும். அறநிலையத் துறைக்கு சொந்தமான கடைகளில் வணிகம் செய்து வரும் வணிகர்களுக்கு நியாய வாடகையை நிர்ணயித்து கடை சீல் வைப்பு நடவடிக்கையை தவிர்த்திட வேண்டும். எம்எஸ்எம்இ பதிவு பெற்ற வணிர்களுக்கு மின்கட்டண சலுகை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு, பெருளாளர் சதக்கத்துல்லா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகள்
சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரயில்: பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்
வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி இறந்த 4 பெண்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 8 ஏக்கரில் நவீன பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பிவைக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.19.29 கோடி தங்க நகைகள், 2.70 கோடி ரொக்கம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது: நடப்பாண்டில் இதுவரை 32 குற்றவாளிகள் கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!