அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பம் வழங்கப்படுகிறது: மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் அறிவிப்பு
2022-09-28@ 18:04:55

சென்னை: தமிழ்நாட்டில் அமைந்துள்ள அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கு பி.என்.ஒய்.எஸ். (B.NY.S) மருத்துவப் பட்டப்படிப்பில் சேர்வதற்கு மேல்நிலைப் பள்ளித் தேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பப் படிவம் தகவல் தொகுப்பேட்டினை, www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் விண்ணப்பப்படிவங்கள் இயக்குநரக அலுவலகத்திலோ அல்லது தேர்வுக்குழு அலுவலகத்திகோ அல்லது வேறு எந்த இடங்களிலோ வழங்கப்படமாட்டாது என்று தெரிவித்தனர்.
மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள் மற்றும் கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற விவரங்களுக்கு www.tnhealth.to.gov.in என்ற இணையதளத்தில் உள்ள தகவல் தொகுப்பேட்டில் அறியலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் கோரப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநரகம். சென்னை-600 106 என்ற முகவரிக்கு 19.10.2022 மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.கடைசி தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளனர்.
விண்ணப்பபடிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை பதிவிறக்கம் செய்ய இன்று 28.09.2022 முதல் 19.10.2022 மாலை 5 மணி வரையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தபால்/கூரியர் சேவை வாயிலாக சமர்ப்பிக்கவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள் 19.10.2022 மாலை 5.30 மணி என்று அறிவித்துள்ளனர்.
Tags:
இயற்கை மருத்துவக் கல்லூரி சேருவதற்கு விண்ணப்பம் வழங்கப்படுகிறது மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் அறிவிப்புமேலும் செய்திகள்
ஆவினில் காலி பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மாநில அளவிலான வனத்தீ மேலாண்மை குறித்த கருத்துப் பட்டறை
அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் விளக்கு பகுதி காவலர் குடியிருப்புக்கு ஆபத்து?.. சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் பரபரப்பு
ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஓபிசி கிரீமிலேயர் வரம்பு போதுமானது என்பதா?: ரூ.15 லட்சமாக உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல்..!!
பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் நிலைய 2ம் கட்ட பணி; வாகன பார்க்கிங் அமைக்க கடைகளை அகற்ற முடிவு: வியாபாரிகள் எதிர்ப்பு
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத்தலைவர், உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அரசுக்கு அன்புமணி கோரிக்கை!!
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!