முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி.. சுமார் 8 நிமிடங்கள் 3,500 அடி உயரத்தில் பறந்தது..!!
2022-09-28@ 16:04:49

வாஷிங்டன்: முற்றிலும் மின்சார ஆற்றலில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள விமானம் வெற்றிகரமாக சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது. அமெரிக்காவில் ஏவியேஷன் ஏர் கிராப் என்ற நிறுவனம் முற்றிலுமாக பேட்டரியால் இயங்கும் வகையில் விமானம் ஒன்றை வடிவமைத்திருக்கிறது. ஆலிஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. வாஷிங்டனில் உள்ள கிராண்ட் கவுண்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்த மின்சார விமானம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக பறந்தது. சுமார் 8 நிமிடங்கள் வரை வானத்தில் பறந்த ஆலிஸ் மின்சார விமானம், 3,500 அடி உயரத்தை எட்டிய பிறகு வெற்றிகரமாக தரையிறங்கியது.
மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் விமானத்தை இயக்கி பரிசோதனை செய்யப்பட்டது. மின்சார ஆற்றலில் இயங்குவதால் இந்த விமானம் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது என்று விமான நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பயிற்சியின் போது விமானத்தில் பதிவான விவரங்களை பொறியாளர்கள் குழு ஆய்விட்டு வருகிறது. 240 முதல் 400 கி.மீ. தூரம் வரை பயணிக்கும் வகையில் ஆலிஸ் விமானம் உருவாக்கப்பட்டிருப்பதாக ஏவியேஷன் ஏர் கிராப் நிறுவனம் கூறியுள்ளது. இன்னும் பல்வேறு சோதனைகள் செய்யப்பட இருப்பதால் இந்த விமானம் பயன்பாட்டுக்கு வர ஒருசில ஆண்டுகள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மசூதி குண்டுவெடிப்பில் 100 பேர் பலி: இந்தியாவில் கூட இப்படி நடப்பதில்லை! பாகிஸ்தான் அமைச்சர் வேதனை
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஊழியர்களுக்கு போனஸை வாரி வழங்கிய சீன நிறுவனம்
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் கடும் உறைபனி: வெள்ளியை உருக்கி ஊற்றியது போல காட்சியளிக்கும் மரங்கள்
ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் வழங்கிய சீன நிறுவனம்: லாபம் பெருகியதை அடுத்து ரொக்கமாகவே போனஸ்
பாலியல் வழக்கில் சிக்கிய நேபாள முன்னாள் கிரிக்கெட் கேப்டன்: மீது விதித்த தடையை நீக்க முடிவு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.51 கோடியாக அதிகரிப்பு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!