SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேளச்சேரி அருகே பயங்கரம்; ரவுடி வெட்டி படுகொலை: மற்றொருவர் படுகாயம்: தப்பிய கும்பலுக்கு வலை

2022-09-28@ 15:10:47

வேளச்சேரி: வேளச்சேரி அருகே ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவருடன் சென்றவரை கும்பல் சரமாரி வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

வேளச்சேரி அடுத்த பள்ளிக்கரணை அம்பேத்கர் குறுக்கு தெரு பகுதியில் சிலர் கத்தி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதிக் கொள்வதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. அதன்படி   போலீசார்  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.  அப்போது அங்குள்ள முட்புதரில் மேடவாக்கம் புஷ்பாநகரை சேர்ந்த ரவுடி பிரைட் என்ற ஆல்வின் (28) என்பவர் தலை, கழுத்து, கை, கால் ஆகிய பகுதிகளில் பலத்த வெட்டுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

அவருடன் சென்ற பெருமாள் (23) என்பவர் கை, கால்களில் வெட்டுகாயங்களுடன்   மயங்கி கிடந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சை சம்பவ இடத்துக்கு வரவழைத்து மயங்கி கிடந்த பெருமாளை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கொலை செய்யப்பட்டு கிடந்த ரவுடி ஆல்வின் சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில்,  ஆல்வின் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் இவர் மீது பல்வேறு வழக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் சூரைமணிக்கும், இவருக்கும் கஞ்சா விற்பதில் மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.  இதன்காரணமாக ஆல்வின் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் ஆல்வின் எதற்காக கொலை செய்யப்பட்டார்?  மாமூல் வாங்குவதில் பிரச்னையா? குடும்ப பிரச்னையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.  ரவுடி  கொலை செய்யப்பட்ட சம்பவம் வேளச்சேரி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • stalin-corp-31

    மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

  • long-whale-newyork

    35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

  • pak-blast-30

    பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

  • china-spring-festival

    சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

  • orange-tree-wishes-27

    ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்