உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பாரம்பரிய இசை நடனத்துடன் சுற்றுலா பயணிகளுக்கு வரவேற்பு
2022-09-28@ 12:35:51

கூடலூர் : உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கூடலூர் ஊட்டி சாலையில் உள்ள ஊசி மலை காட்சி முனை பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு பழங்குடியினரின் பாரம்பரிய இசை நடனத்துடன் மலர் செண்டு வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது. எஸ்கேஏஎல் சர்வதேச சுற்றுலா அமைப்பு கோவை, சிடிஆர்டி பழங்குடியினர் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு ஊசிமலை காட்சி முனைப்பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு மலர் செண்டு வழங்கியும் இனிப்பு வழங்கியும் வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் பழங்குடியினர் பாரம்பரிய இசையுடன் பழங்குடியின பெண்கள் நடனமாடி சுற்றுலா பயணிகளை மகிழ்வித்தனர். இங்கு வந்த உள்ளூர், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிடிஆர்டி அறக்கட்டளை அறங்காவலர் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் அர்ஜுனன், மணிகண்டன், சிடிஆர்டி ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன், கல்லூரி மாணவ மாணவியர், மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கொடைக்கானலுக்கு வரும் வெளியூர் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் உயர்ந்தது
ரூ.784 கோடியில் பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம் கல்வியும், மருத்துவமும் இரண்டு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
குடிநீர் தொட்டியில் இன்ஜினியர் சடலம் மீட்பு அமைச்சர், டிஐஜி நேரில் விசாரணை
தாலி கட்டும் நேரத்தில் மணமகன் ஓட்டம் மண்டபத்துக்கு வந்தவர் மாப்பிள்ளை ஆனார்
விஐடி பல்கலையில் கலைஞர் மாணவர் விடுதி, பேர்ல் ஆராய்ச்சி கட்டிடம் திறப்பு தமிழகத்தில் மாபெரும் கல்வி புரட்சி: தனியார் கல்வி நிறுவனங்களும் பங்களிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
திருப்பூரில் வட இந்தியர்கள் உள்ளூர் ஆட்களிடம் சண்டையில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு.!
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!