நல்ல விதையே 20% வரை மகசூலை அதிகரிக்கும்-விதை நேர்த்தி முகாமில் வேளாண் அலுவலர்கள் தகவல்
2022-09-28@ 11:52:31

ராமநாதபுரம் : நல்ல விதையும், விதை நேர்த்தியும் மட்டுமே 10 முதல் 20 சதம் வரை மகசூலை அதிகரிக்க செய்யும் என வேளாண் அலுவலர்கள் தெரிவித்தனர்.
திருப்புல்லாணி வட்டாரம் ஆனைகுடி கிராமத்தில் வேளாண் தொழில் நுட்ப மேலாண் முகமை திட்டம் சார்பில் நெற்பயிரில் விதை நேர்த்தி செயல் விளக்க முகாம் நடந்தது. மாநில திட்ட வேளாண் துணை இயக்குநர் ஷேக் அப்துல்லா தலைமை வகித்தார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி கூறுகையில்,விதை நேர்த்தி என்பது விதைகளின் முளைப்புத்திறன்,பயிரின் வளர்ச்சி, மகசூலை அதிகரிக்க, நோய், பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க, விதைப்புக்கு முன் விதைகளை ரசாயன பூஞ்சாணம், பூச்சிக் கொல்லிகள் அல்லது உதிர் உயிர் பூஞ்சாணம். பாக்டீரியாக்களை கொண்டு உயிர் உரங்களுடன் மேல் பூச்சு செய்வதே ஆகும்.
விதை நேர்த்தியில் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர்கள் மண்ணிலுள்ள கனிம பொருட்களை பயன்படுத்தி பல மடங்காக பெருகி பயிர்களுக்கு நீண்ட கால பாதுகாப்பை தருகிறது.
உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம் போன்றவை பயிர்களுக்கு தேவையான தழைச்சத்து, பாஸ்போ பாக்டீரியா மண்ணில் கிட்டாத நிலையில் உள்ள மணிச்சத்தை கிரகித்து பயிர்களுக்கு கிடைக்கும் வகையில் உதவி செய்கின்றன என்றார்.
வேளாண் துணை இயக்குநர் ஷேக் அப்துல்லா கூறுகையில், ரசாயன பூஞ்சாண மற்றும் பூச்சி கொல்லிகளால் விதை நேர்த்தி செய்தால் குறைந்தது 24 மணி நேரம் இடைவெளி விட்டு பின்பு தான் உயிர் உர விதை நேர்த்தி செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் ரசாயன பூஞ்சான மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை உயிர் உரங்களுடன் கலக்கக் கூடாது. விதைகளை நிழலில் மட்டுமே உலர்த்த வேண்டும்.
இத்தகைய மிக சிக்கனமான எளிய தொழில்நுட்பமான விதை நேர்த்தி முறைகளை கடைப்பிடிப்பதன் வாயிலாக பூச்சி மற்றும் நோய்களை வரும்முன் தடுத்து அதிக மகசூல் பெற்று பயனடையலாம். ஏனெனில் நல்ல விதையும், விதை நேர்த்தியும் மட்டுமே 10 முதல் 20 சதம் வரை மகசூலை அதிகரிக்க செய்கின்றன என்றார்.
திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குநர் அமர்வால் கூறுகையில், மண்ணின் மூலம் பரவும் நோய்கள், இலை மற்றும் தண்ணீர் மூலம் பரவும் பூஞ்சாண நோய்களான குலைநோய், இலையுறை கருகல் நோய், இலைப்புள்ளி நோய் ஆகியவற்றை சூடோமோனாஸ் என்ற எதிர் உயிரி பாக்டீரியா கட்டுப்படுத்துகிறது என்றார்.
திருப்புல்லாணி வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரெங்கநாதன் பூஞ்சான விதை நேர்த்தி மற்றும் உயிர் உர விதை நேர்த்தி செய்யும் முறைகளை செயல்விளக்கம் அளித்தார். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் சந்திரலேகா, உதவி தொழில்நுட்ப மேலாளர் சேகர் ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட் மோடி அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: பாலகிருஷ்ணன் பேட்டி
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு ஓடும் ரயிலில் பாய்ந்து பள்ளி மாணவியுடன் கல்லூரி மாணவர் தற்கொலை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்
மேலவளவு முருகேசன் கொலை வழக்கு!: 13 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யகோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4-ம் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஒரே நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
திருமழிசையில் மண்புழு உரம் தயார் செய்யும் பணி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!