பாக். பிரதமர் பதவி விலக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி:ரகசிய பேச்சு ஆடியோ கசிவு
2022-09-28@ 01:33:52

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமரின் ஷெபாஸ் ஷெரீப்பின் அலுவலக அறைக்குள் பேசப்பட்ட ரகசிய பேச்சுகளின் ஆடியோ வெளியானதால், அவர் பதவி விலகும்படி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். இவர் தனது அலுவலக அறையில் தனது அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் பேசிய ரகசிய பேச்சுகள், ஆடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து அணுமின் உலைக்கான இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கான வசதிகளை தனது மருமகனான ரஹீலுக்கு செய்து தரும்படியும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் கட்சியின் துணை தலைவரான மரியம் நவாஸ் ஷெரீப் தன்னிடம் கேட்டுள்ளதாக உயரதிகாரியிடம் அவர் பேசுவதும், இடைத்தேர்தல் தொடர்பாக கட்சியின் முன்னணி தலைவர்களுடன் பேசுவதும் ஆடியோவாக வெளியாகி இருக்கிறது.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியை சேர்ந்த பவத் சவுத்ரி, இவற்றை வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோ வைரலானதை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமரின் அலுவலக பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. எனவே, பிரதமர் பதவியில் இருந்து ஷெபாஸ் ஷெரீப் விலக வேண்டும் என்று இம்ரான் கானும், இதர எதிர்கட்சி தலைவர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தனது ஆடியோ வெளியானது தொடர்பாக விசாரணை நடத்தும்படி ராணுவ புலனாய்வு அமைப்புகளின் கூட்டு விசாரணைக் குழுவின் விசாரணைக்கு ஷெபாஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், தேசிய பாதுகாப்புக் குழுவின் (என்எஸ்சி) கூட்டத்தையும் இன்று கூட்டியுள்ளார்.
*நாடு திரும்பினார் இஷாக் தர்தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால், பாகிஸ்தான் முன்னாள் நிதியமைச்சர் இஷாக் தர் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இவரை மீண்டும் நிதியமைச்சராக்கும்படி, பிரதமர் ஷெபாசுக்கு அவருடைய அண்ணன் நவாஸ் ஷெரீப் அறிவுரை கூறினார். அதன்படி, இஷாக் தர் நேற்று பாகிஸ்தான் திரும்பினார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டை மீட்டெடுப்பேன்,’ என்று கூறினார். இஷாக் தர் பதவியேற்பதற்காக நிதியமைச்சர் மிப்தா இஸ்மாயில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும் செய்திகள்
அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு: அதிபர் ஜோ பைடன் பாராட்டு
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.61 கோடியாக அதிகரிப்பு.! 67.71 லட்சம் பேர் உயிரிழப்பு
மேகாலயாவில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்முதல்வர் கான்ராட் வாக்குறுதி
விக்கிபீடியாவை முடக்கியது பாகிஸ்தான்
75வது சுதந்திர தின கொண்டாட்டம் இலங்கை தனது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்: அதிபர் ரணில் வலியுறுத்தல்
இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை இந்தியாவுக்கு அனுப்ப தயார்: சம்பிரதாயப்படி அமெரிக்காவில் தேங்காய் உடைத்து வழியனுப்பல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!