இந்தியா, பாக். இரண்டுமே எங்களின் நட்பு நாடுகள்: ஜெய்சங்கருக்கு அமெரிக்கா பதில்
2022-09-28@ 01:32:15

வாஷிங்டன்: ‘இந்தியா, பாகிஸ்தான் இரண்டுமே எங்களின் முக்கியத்துவம் வாய்ந்த நட்பு நாடுகளே’ என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அமெரிக்கா பதிலளித்துள்ளது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துள்ள எப்-16 போர் விமானத்தை நவீனப்படுத்துவதற்கு நிதி உதவி வழங்க அதிபர் பைடன் நிர்வாகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இது, தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கான நடவடிக்கை என்று அமெரிக்கா விளக்கமளித்தது. தற்போது, அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘தீவிரவாதத்தை
ஒடுக்குவதற்காக என சொல்லி யாரையும் முட்டாளாக்க முடியாது’ என காட்டமாக கருத்து தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அமெரிக்க வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், ‘‘இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுடனான எங்கள் உறவை நாங்கள் இணைத்துப் பார்க்க விரும்பவில்லை. இரு நாடுகளுடனான எங்களின் உறவு தனித்துவமானது. இருநாட்டுடனும் நாங்கள் வளங்களையும், தகவல்களையும் பரிமாறிக் கொள்ள விரும்புகிறோம்’’ என்றார்.
மேலும் செய்திகள்
பாலியல் வழக்கில் சிக்கிய நேபாள முன்னாள் கிரிக்கெட் கேப்டன்: மீது விதித்த தடையை நீக்க முடிவு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.51 கோடியாக அதிகரிப்பு
ஹாலிவுட் நடிகை மரணம்
விமான கழிவறையில் புகைபிடித்த பயணி கைது
அமெரிக்க தலைமை தளபதியை சந்தித்தார் அஜித் தோவல்: இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த உறுதி
இந்தியாவின் பணவீக்கம் 5 சதவீதமாக குறையும்: சர்வதேச நாணய நிதியம் கணிப்பு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!