கர்ப்பிணிக்கு வீட்டிலேயே சுகபிரசவம்; 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டு
2022-09-27@ 20:07:44

கோவை: கோவை கருமத்தம்பட்டியில் நிறைமாத கர்ப்பிணிக்கு வீட்டிலேயே சுக பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர். கோவை கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டர் கோயில் பகுதியை சேர்ந்தவர் கைலாஷ். இவரின் மனைவி பேபிதேவி (23). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு வீட்டில் இருக்கும்போது நேற்று பனிக்குடம் உடைந்தது. இதனால் மிகுந்த வலியுடன் துடித்து வந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தபோது பிரசவ வலி அதிகரித்து குழந்தையின் தலை வெளியே வந்திருந்தது.
இதையடுத்து, ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் முருகன், அந்த பெண்ணின் வீட்டிலேயே பைலட் பாண்டி என்பவரின் உதவியுடன் பிரசவம் பார்த்தார். இதில், அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக தாய், சேய் இருவரையும் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
வாணியம்படி அருகே தேசிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்: நடவடிக்கைக்கு பொதுமக்கள் கோரிக்கை
திருப்பத்தூர் அருகே ரூ.11 கோடியில் ஜவ்வாதுமலை-புதூர்நாடு சாலை பணி: மார்ச் இறுதிக்குள் முடியும் என கோட்ட பொறியாளர் தகவல்
சேலம்-நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசுவாமி கோயிலில் நாளை தைப்பூசத்திருவிழா தேரோட்டம்
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எதிரொலி: தொப்பூர் கணவாயில் விபத்து உயிரிழப்பு குறைந்தது
ஈரோட்டில் ஆதியோகி ரத யாத்திரை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம்
விடாமல் தொடரும் கனமழை: தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!